அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர், ஈரோடு மாவட்டம்.

+91- 4285 – 222 010, 222 080 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஆதிநாராயணர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்

கிணற்றுநீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பாரியூர்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

விவசாயத்தில் செழித்துத் திகழும் இப்பகுதியில், முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது. பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் செய்யலாம்.

ஆதிநாராயணர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவர் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறார். அமாவாசைகளில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆதிநாராயணரின் கோஷ்டச்சுவரில் வேணுகோபாலர், நாராயணர், வெங்கடாஜலபதி, நரசிம்மர், குருவாயூரப்பன் என திருமாலின் திருவுருவங்கள் உள்ளன. பிரகாரத்தில் நம்மாழ்வார், இராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். சுவாமி, வெள்ளி கருடாழ்வார் மீது விசேஷ நாட்களில் மட்டும் உலா வருகிறார். இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *