அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோட்டை முனீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத்தருளினார் முனீஸ்வர சுவாமி. இதனால் கோட்டை முனீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள்.

மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும். புதிதாக வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள். இதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்.

தன்னாசியப்பர், செல்லாண்டியம்மன் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

ஆடித் திருவிழா, பூச்சாடல் விழா

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள முனீஸ்வரரை வணங்கி செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

மாவிளக்கு எடுத்தும், பொங்கல், கரும்பு படைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *