அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு – 629 252, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4651 – 222 596

காலை 5 மணி முதல் 10மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – மந்தைக்காடு

ஊர்: – மண்டைக்காடு

மாவட்டம்: – கன்னியாகுமரி

மாநிலம்: – தமிழ்நாடு

காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீசக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.

அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.

இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.

ஆரஞ்சு கலரில் முகப்பு.

ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.

15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன் என்பது சிறப்பு.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில்

மண்டையப்பம் : பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.

இருமுடி கட்டிப் பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.

காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பிரசாதமாக புட்டமுது கொடுக்கப்படுகிறது.

மாசிப் பெருந்திருவிழா – 10 நாள் திருவிழா

10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருட்டி, தோடம், தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்.

கல்யாண காரியங்களுக்கு பட்டு, தாலி காணிக்கை செலுத்தலாம் உடல் நலம் குணமாக வெள்ளியில் கை, கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது. திருட்டி தோடம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *