அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நரசிம்ம ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வரதராஜபுரம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் இலட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி

வேண்டுகோள்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நரசிம்ம ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வடை மாலை சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *