அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 94433 34624 (மாற்றங்களுக்குட்பட்டது)

மூலவர்

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோயம்புத்தூர்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி அஞ்சேல்என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது.

இடது கையில் கதாயுதம். மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம். மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. இராமாயணத்தில் இலட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதிதான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர். அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது. இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்என்று இராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.

இராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் இராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.

இத்தலத்திலுள்ள உற்சவர் ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகளால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார். இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது.

திருவிழா:

அனுமத் ஜெயந்தி, இராமநவமி, வைகுண்ட ஏகாதசி

வேண்டுகோள்:

பயம், நோய்கள் தீர, எதிரிகளை அழிக்க, மரண பயம் நீங்க, செல்வச் செழிப்புடன் திகழ, அஷ்டலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேம் செய்தும், துளசியால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

3 Responses to அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

  1. MURUGANANDAM says:

    Nice collection of temple details. Going to anyone of the temples mentioned by you, to get rid of the fear at the time of death is somewhat insufficient and requires some explanations. What happens at the time of Death? Whether it is painful or not? What a man has to do to encounter a peaceful Death? You can give a small abstract of advises which will complete the heading ‘Yamabayam Neenga’

  2. My Dear MURUGANANDAM,
    I note to edit this post with details you wanted after sometime. FORBEAR

  3. MURUGANANDAM says:

    Dear Sir, Thank you. I will wait for your article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *