அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி

அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4255- 266 515, 268 515,268 415

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேலாயுதர்

உற்சவர்

முத்துக்குமாரர்

தீர்த்தம்

சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

செஞ்சேரி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சூரபத்மன், தான் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அவனை சம்காரம் செய்து தேவகுலத்தைக் காக்க சிவபெருமான் முருகனைப் படைத்தார். முருகனும் அசுரனை அழிக்கக் கிளம்பினார். அப்போது அம்பாளுக்கு சிறுவனான முருகன், சூரனை அழிக்கும் அளவிற்கு திறம் பெற்றவனா?” என்ற சந்தேகம் வந்தது. எனவே அம்பாள் சிவனிடம், “சூரன் போர் புரிவதில் வல்லவன். மாயைகள் செய்யக்கூடியவன். அவனது மாயைகளை சிறுவனான முருகன் வெல்வது எளிதாகுமா?” எனக் கேட்டாள். சிவன் அவளிடம், “முருகன் சூரனை அழிப்பதற்கென்றே அவதரித்தவன். அவன் இல்லாமல் வேறு யாராலும் சூரனை அழிக்க முடியாதுஎன்றார். ஆனாலும் பார்வதிக்கு மனம் கேட்கவில்லை. அவள் முருகன் மீதுள்ள பற்றால் போரில் அவனே வெற்றி பெற மந்திர உபதேசம்செய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அம்பாளின் வேண்டுதலுக்கு இசைந்த சிவன், முருகனிடம், “நீ போருக்கு செல்லும் வழியில் தர்ப்பை புற்கள் நிறைந்த ஓரிடத்தை காண்பாய். அங்கே ஒரு ஆறு ஓடும். அவ்விடத்தில் மலையின் வடிவில் நான் இருப்பேன். அருகில் உன் தாயார் சக்திகிரிஎன்ற பெயரில் மலையாக இருப்பாள். மேற்கே திருமாலும், கிழக்கே பிரம்மனும் பெரிய பாறை வடிவில் இருப்பர். அங்கே என்னை வேண்டித் தவம் இரு. நான் உனக்கு மந்திர உபதேசம் செய்கிறேன்என்றார். அதன்படி சூரனை சம்காரம் செய்ய சென்ற முருகன் இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டித் தவம் செய்தார். சிவன் அம்பாளுடன் அவருக்கு காட்சி தந்து, மந்திர உபதேசம் செய்தார். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைஎன்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட அவரது ஆலோசனைப்படி சூரனை வென்றார் முருகன். பெற்றோர் பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் எதிலும் வெற்றியே பெறுவர் என்பதை எடுத்துக்காட்ட தோன்றியது இத்தலம்.

இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார். சூரனை அடக்கி அவனை சேவலாக மாற்றி, தன் பிடிக்குள் வைத்திருப்பதை இந்த அமைப்பு காட்டுகிறது. முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். இவரது மயில் வாகனம் வடக்கு நோக்கியிருக்கிறது. இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் இலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். உற்சவர் முத்துக்குமாரர் வள்ளி, தெய்வானை மூவரும் பத்ம பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அருணகிரியார் திருப்புகழில், சுவாமியைப் பற்றி பாடியுள்ளார்.

சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தில் அருளும் வேலாயுதரை மந்திர முருகன்என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி மந்திரி முருகன்என்றாகி, “மந்திரியப்பன்என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இவரை பக்தர்கள் தங்களது கஷ்டங்களுக்கு ஆலோசனை சொல்லும் மந்திரியாகக் கருதுகின்றனர். இப்பகுதியில் பிறக்கும் குழந்தைக்கு மந்திரிஎன்ற பெயரை வைக்கும் பழக்கமும் இருக்கிறது. மந்திர உபதேசம் செய்த மலை என்பதால் இம்மலையை மந்திராசலம்“, “மந்திரகிரிஎன்றும், முருகனுக்கு அருள் செய்வதற்காக சிவபெருமான் தென்திசை வந்து இங்கு வீற்றிருப்பதால் தென்சேரிகிரிஎன்றும் அழைக்கின்றனர்.

தனிச்சன்னதியில் நடராஜர், சிவகாமியம்பாள் காட்சி தருகின்றனர். கைலாசநாதர், பெரிய நாயகி, விநாயகருக்கும் சன்னதிகள் உள்ளன. அருகிலேயே சக்தி மலை, திருமால் மலை, பிரம்மா மலை என்ற மூன்று மலைகள் இருக்கிறது. நவக்கிரக சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கியிருக்க, பிற கிரகங்கள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளது.

திருவிழா:

தைமாதம் 11 நாள் பிரம்மோற்ஸவம்.

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

புதிதாக தொழில் தொடங்கவும், திருமணம் நடத்துவதற்காகவும் இங்கு முருகனிடம், “பூக்கேட்டல்எனும் சடங்கை செய்கின்றனர்

நேர்த்திக்கடன்:

கிரக தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள சூரியனுக்கும் செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *