அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலதண்டாயுதபாணி, ஜலகண்டேசவரர்

அம்மன்

ஜலகண்டீஸ்வரி

தலவிருட்சம்

செண்பக மரம்

தீர்த்தம்

நீலநாரயணதீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

மான்குன்றம்

ஊர்

எல்க் மலை

மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலுக்கு, குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர, பழனிக்குச் சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்குச் செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோயில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக ஆனது. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் எல்க் குன்று இருந்த இடம் இப்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோயில். முருகன் உள்ள தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம்.

7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோயில் இது. படுகர் கோயில் கருவறையில் பாறையை ஒட்டினாற்போல் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது போன்ற தோற்றம் தெரிவது சிறப்பு.

திருவிழா:

5 நாள் திருவிழா. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி, ஆங்கில, தமிழ் வருடப்பிறப்பு, தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு உண்டு.

வேண்டுகோள்:

முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன. மேலும் இத்தலம் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும் அழகான இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுப்புற சூழ் நிலையாலும் தூய்மையான காற்றாலும் இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் மூச்சு திணறல், இரத்தகொதிப்பு, கை, கால் மூட்டு வலி போன்ற உடல் ரீதியான பிரச்னைகளும் குணமடைவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்

நேர்த்திக்கடன்:

முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *