அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 94442 80595, 94441 71529

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: பாலசுப்பிரமணியர்

பழமை: 500 வருடங்களுக்கு முன்

ஊர்: சிறுவாபுரி, சின்னம்பேடு

மாவட்டம் : திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அருணகிரிநாதர்

இராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாகக்குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர இலட்சுமணனை அனுப்பினார் இராமர். இலட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. இதனால் இராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும். இந்த வரலாற்று செய்தியை, “சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது. இராமனிடம் இலவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரிஎன்ற சின்னம்பேடுஎன்றும் இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடுஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார்.

அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார். இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.

கோயில் ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.

திருவிழா: தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை: இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

தங்கள் கோரிக்கை நிறைவேரியவுடன் முருகனுக்கு பால் அபி‌ஷேகம் செய்கிறார்கள்.

இருப்பிடம் :

சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து (30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *