சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம்

அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம், தர்மபுரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புலிங்கேஸ்வரர்
ஊர் அமானிமல்லாபுரம்
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

1860ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த சின்னவேடி செட்டியார் என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “இங்குள்ள தோப்பில் இலிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எனக்கு கோயில் கட்டு. இப்பகுதியை சிறப்பாக பாதுகாப்பேன்என உத்தரவிட்டார். பதறி எழுந்த செட்டியார் மறுநாளே கோயில் கட்டுவதற்கான பணிகளைத் துவங்கினார். அவருக்குரிய தென்னந்தோப்பில் இறைவனைத் தேடி அலைந்தார். இலிங்கத்தைக் காணவில்லை. பிறகு ஒரு புளியமரத்தடிக்கு சென்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாம் என யோசனை செய்துகொண்டே ஒரு குச்சியால் எதேச்சையாக மண்ணை கிளறிக் கொண்டிருந்தார். அப்போது குச்சியில் ஏதோ தட்டுப்பட இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தோண்டிப் பார்த்தார். உள்ளே இலிங்கம் ஒன்று இருந்தது.

அந்த இலிங்கத்தை எடுத்து புளியமரம் இருந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோயில் கட்டுவதற்கு புளிய மரம் இடைஞ்சலாக இருந்தது. எனவே அதை அகற்ற முயன்றனர். அப்போது ஒரு துறவி அங்கு வந்து அந்த முயற்சியைக் கைவிடும்படி கூறிவிட்டு சென்றார். கோயில் கட்ட சரியான இடம் இல்லாததால் செட்டியார் குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் மண்ணை தோண்டி இலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்தார். ஆனால் இலிங்கம் லேசாக அசைந்துகொடுத்ததே தவிர, மண்ணைவிட்டு வெளியே வர மறுத்தது. மேலும் ஒரு புறமாக சாய்ந்துவிட்டது. வேறு வழியில்லாததால் சுற்றிலும் இருக்கும் மண்ணை மட்டும் அகற்றிவிட்டு, அந்த இடத்திலேயே கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நேரத்தில் கடும் மழை, மின்னல் ஏற்பட்டது. அந்த மின்னலில் புளியமரம் தாக்கப்பட்டு இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது. இதனால் கோயில் கட்டுவதற்குரிய தடை நீங்கியது. அந்த இடத்திலேயே இலிங்கேஸ்வரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. தானாக கிடைத்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு சுயம்புலிங் கேஸ்வரர்எனப் பெயரிடப் பட்டது. இங்கே லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். குழந்தை தன் தாயிடம் தனக்கு தேவையான பொருளை கேட்கும்போது, பெற்ற தாய் சிரமப்பட்டாவது அதை வாங்கித்தருவதுபோல, இங்கு வந்து வழிபடுவோருக்கு இலிங்கேஸ்வரர் தாயுள்ளத்துடன் வேண்டியதை அளிக்கிறார். எதையும் கேட்காமலேயே தேவையானதை தரும் தலம் என இப்பகுதி மக்களிடையே சிறப்பு பெற்றுள்ளது. சிவனின் முன்பு நந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் :

அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில்.

திருவிழா :

மாத சிவராத்திரி, மார்கழி திவாதிரை, மாதத்தில் இரண்டுநாள் பிரதோஷபூஜை.

வேண்டுகோள்:

திருமணத்தடைநீங்க, குழந்தைச்செல்வம்பெற, கல்வியில்சிறந்துவிளங்க, இறைவனைவேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும் அம்மனுக்கும்திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள்செய்துநேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *