இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம்.

+91-94885 53077

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர்
அம்மன் அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெரியகுளம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில் இது. இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் தெரியும்.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக் கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திரசோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான். இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் இலிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில்என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது.

முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, ஜுரதேவர், சப்தகன்னிகள், பைரவர், இராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர். சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு சான்று பகரும் சிறப்பு பெற்ற இக்கோயில் தூண்களில் அகோரவீரபுத்திரர், உருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர்.

திருவிழா:

சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி பிரமோற்சவம்.

நம்பிக்கைகள்:

இங்கு நீராடி முருகனை வணங்கிட, தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பெரிய குளம் அமைந்த இடமாகையால் இந்த ஊரும் பெரியகுளம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது. இது இலக்கிய வழக்கில் குளந்தை என்று குறிக்கப்பெற்று குளந்தை மாநகரயிற்று. அருணகிரிநாதரால் திருப்புகழில் இடம்பெற்ற பெருமையையும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திரா சோழ விநாயகர் கோயில் இந்த பெரிய கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயிலாகும். பெரியகுளம் நகரில் காளத்திநாதர் ஞானாம்பிகை கோயில், சொக்கநாதர் மீனாக்ஷி கோயில், வைத்தியநாத சுவாமி தையல்நாயகி கோயில் என்று சிவ பெருமானின் முக்கிய மூர்த்தங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. ஜெயவீர மகிரிஷி என்ற சித்தரின் ஜீவா சமாதி இத்திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நகரின் வடகரையில் மௌன சுவாமிகள் சமாதியும் மடாலயமும் அமைந்துள்ளன. இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு செல்லம் சுவாமிகள் என்ற அவ தூதர் வாழ்ந்த புண்ணிய பூமி. இத்திருக்கோயிலின் மேற்கே கைலாசநாதர் கரட்டில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நமபப்படுகிறது. இது இன்னும் நம்முடைய மக்களுக்கு தெரியாத புண்ணிய தலமாக மறைந்துள்ளது. சித்தர் வழிபாட்டில் ஆர்வமுடையோரும் ஆன்மீக தேடல் உள்ளவர்களும் அவசியம் வந்து இறைவனின் பேரருளை பெற வேண்டுகிறேன்.

சின்ன அக்கா, பெரிய அக்கா என்ற இருவரின் கதை நாடோடிப் பாடலாக பெரியகுளம் பகுதியில் வழங்கப்படுகிறது . அவர்கள் இருவரும் பெரிய குளத்தின் கரையில் இன்றும் கோவில் கொண்டுள்ளனர். பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் அவர்கள் குளக்கரையில் இருந்து தங்கள் உயிரைக்கொடுத்து மக்களை காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.

**** முனைவர் நா. மால்முருகன்

9 Responses to இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம்

  1. முனைவர் நா. மால்முருகன் says:

    பெரிய குளம் அமைந்த இடமாகையால் இந்த ஊரும் பெரியகுளம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது. இது இலக்கிய வழக்கில் குளந்தை என்று குறிக்கப்பெற்று குளந்தை மாநகரயிற்று. அருணகிரிநாதரால் திருப்புகழில் இடம்பெற்ற பெருமையையும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திரா சோழ விநாயகர் கோயில் இந்த பெரிய கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயிலாகும். பெரியகுளம் நகரில் காளத்திநாதர் ஞானாம்பிகை கோயில், சொக்கநாதர் மீனாக்ஷி கோயில், வைத்தியநாத சுவாமி தையல்நாயகி கோயில் என்று சிவ பெருமானின் முக்கிய மூர்த்தங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. ஜெயவீர மகிரிஷி என்ற சித்தரின் ஜீவா சமாதி இத்திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நகரின் வடகரையில் மௌன சுவாமிகள் சமாதியும் மடாலயமும் அமைந்துள்ளன. இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு செல்லம் சுவாமிகள் என்ற அவ தூதர் வாழ்ந்த புண்ணிய பூமி. இத்திருக்கோயிலின் மேற்கே கைலாசநாதர் கரட்டில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நமபப்படுகிறது. இது இன்னும் நம்முடைய மக்களுக்கு தெரியாத புண்ணிய தலமாக மறைந்துள்ளது. சித்தர் வழிபாட்டில் ஆர்வமுடையோரும் ஆன்மீக தேடல் உள்ளவர்களும் அவசியம் வந்து இறைவனின் பேரருளை பெற வேண்டுகிறேன்.

  2. பங்களிப்புக்கு நன்றி, நண்பரே.

  3. B SRIVATHSAN says:

    Dear sir,
    Thanks for the information. basically my native also the same.When we are studied we are not having web site and otherthing may be my father and mother known about these things.
    Previously there was varaga nadhi now i think they build dam so there is no river.

    I also heard story that there is periya akka and chinna akka lived in the place. They sacrifice their life for the flood. They stand before the KULAM(POND) and sacrifice their liefe, i heard through various sources i am not dame sure whther it is happend

    Thank you veruy much for giving nice information about our periyakulam

    B SRIVATHSAN
    PERIYAKULAM
    NOW I AM AT NEW DELHI

  4. B SRIVATHSAN says:

    DEAR SIR
    REALLY MY NATIVE PLACE IS NICE PLACE

    IN AND AROUND VAIGAIDAM SURULI FALLS AND KUMBAKARAI

    THANKS FOR PUBLISH THE SAME

    i am once thanks for the service rending by u

    vazhga vaiyagam vazhga vazhamudan

    vazhiya senthamizh vazhga nattramilar
    vazhiya bharata nadu
    vande madaram vande madarm
    jai hind
    b srivathsan
    new delhi 110 064

  5. முனைவர் நா. மால்முருகன் says:

    அன்பு நண்பரே

    சின்ன அக்கா, பெரிய அக்கா என்ற இருவரின் கதை நாடோடிப் பாடலாக பெரியகுளம் பகுதியில் வழங்கப்படுகிறது . அவர்கள் இருவரும் பெரிய குளத்தின் கரையில் இன்றும் கோவில் கொண்டுள்ளனர். பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் அவர்கள் குளக்கரையில் இருந்து தங்கள் உயிரைக்கொடுத்து மக்களை காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.

    இன்னும் இது போன்ற ஏராளமான புண்ணிய கதைகள் இங்கு உண்டு..

    திரு. ஸ்ரீவத்சன் அவர்களே என்னுடைய ஈ மெயில் : n _malmurugan @yahoo .com . இதில் தொடர்பு கொள்ளவும்.

    நமது ஊரின் பெருமையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி.

  6. B SRIVATHSAN says:

    அன்புள்ள திரு மால்முருகன் அவர்களக்கு
    ஸ்ரீவத்சன் இன் அனந்த கோடி நமஸ்காரங்கள்
    இப்பவும் நீங்கள் பெரியகுளத்தில் தான் இருக்கிரிகளா ?

    நான் தற்பொழது புது டெல்லி இல் உள்ளேன்

    நன்றி

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    பா ஸ்ரீவத்சன்
    srivathsan28051967@gmail.com

  7. B SRIVATHSAN says:

    அன்புள்ள திரு மால்முருகன் அவர்களக்கு
    ஸ்ரீவத்சன் இன் அனந்த கோடி நமஸ்காரங்கள்
    இப்பவும் நீங்கள் பெரியகுளத்தில் தான் இருக்கிரிகளா ?

    நான் தற்பொழது புது டெல்லி இல் உள்ளேன்

    நன்றி

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    பா ஸ்ரீவத்சன்

  8. முனைவர் நா. மால்முருகன் says:

    அன்பிற்குரிய திரு ஸ்ரீவத்சன் அவர்கட்கு

    நான் தற்பொழுது திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு கல்லூரியில் இயக்குனராகப் பணிபுரிகிறேன். ஆனாலும் என்னுடைய பெற்றோர் அங்கு தான் உள்ளனர். நானும் மாதம் ஒரு முறை சென்று வருகிறேன். என்னுடைய மின்னஞ்சலுக்கு அவசியம் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *