கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமசுந்தரி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாரைமங்கலம்
ஊர் தாரமங்கலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

தாருகா வனத்தில் அமரகுந்தி என்ற ஊரை கெட்டி முதலியார் என்பவர் அரசாண்டு வந்தார். பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்கையில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் வந்தது. அந்தத் தகவல் கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தார். தான் கேள்விப்பட்ட தகவல்படி, அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது. அதை கண்டு பரவசப்பட்ட கெட்டி முதலியார், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்தார். அவர் அங்கு வழிபாடுகள் செய்தார்.

இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக்
கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக்

கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.

மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.

இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.

இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்த பாதாள இலிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன.

இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.

சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

திருவிழா:

தைப்பூசம் தெப்பத்தேர் – 15 நாள்.

கார்த்திகை, திருவாதிரை, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதும். இவை தவிர வருடத்தின் முக்கிய விசேச தினங்களான தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தினங்களின் போது சிறப்பு பூசை உண்டு.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது என்று இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, விவசாயச் செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பது, மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், செய்யலாம். அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. அன்னதானம் வழங்கலாம், இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

One Response to கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம்

  1. subburajpiramu says:

    மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *