சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

+91 – 4574 268906

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர் (திருபதகேசர்)
உற்சவர் சோமநாதர்
அம்மன் ஆனந்தவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மதுகூபம், சந்திரபுஷ்கரணி
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஸ்தூலகர்ணபுரம், சந்திரப்பட்டிணம்
ஊர் மானாமதுரை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

இருபத்‌தேழு நட்சத்திர தே‌வதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ‌ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டிப் பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சசோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும் கோபங்‌க‌ொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்படப்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக ‌தேயத்‌தொடங்கின.

இதனால் அச்சமுற்ற சந்திரன் தனது சாபம் நீங்கிப் பழைய பொலிவு பெற்றிட அகத்தியரிடம் வழி கேட்டான். அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதியின் மேற்கு கரையில் அமைந்த வில்வவனத்தில் அருட்காட்சி தரும் இலிங்கத்திற்குத் தனியே கோயில் எழுப்பி பூசிக்க அவனது பிணி தீர்ந்து பழைய நிலை கிட்டும் என கூறி அருளினார்.

தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதியில் அகத்தியர் கூறியது போல இலிங்கம் அமைந்திருப்பதைக் கண்ட சந்திரன் பெருமகிழ்வுற்று தனிய‌ே தீர்த்தம் ஒன்றினை அமைத்து அத்தீர்த்தத்திலும், வைகையிலும் நீராடி, சிவன‌ை மனம் உருகி தனது கலையினால் ‌தொடர்ந்து பூசித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தான். அவனது பக்தியில் அகம் மகிழ்ந்த சிவபெருமான் அருட்காட்சியளித்து, அவனது நோயைப் போக்கி அருளினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவரே இத்தலத்தில் உமையவள் ஆனந்தவல்லியுடனுறை சோமநாதராக காட்சி தருகிறார்.

பிற்காலத்தில் இந்த ‌கோயில் பிரளயத்தால் அழிந்திட இறைவனின் கட்டளைப்படி ஸ்தூலகர்ண மன்னன் மீண்டும் இக்கோயி்லை புதுப்பித்துக் கட்டினார்.

சிவபெருமான் தனது திருவிளையாடலின் போது தமது அடியார் மாணிக்கவாசகருக்காக இத்தலத்தில்தான் நரிகளைப் பரிகளாக மாற்றிடக் கயிறு மாற்றிக்கொடுத்தார்.

ஸ்ரீராமர், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து அதன் பின்பு சேது அமைத்து இலங்கைக்குச் சென்று முடிசூடினார். ராமன் ராவணனுடன் போர் புரிந்த போது வானரச்சேனைகளின் பசியை போக்கிய தலம். பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தினை, இத்தலத்திற்கு வந்து வில்வ வனத்தில் இருந்த இலிங்க‌த்தினைப் பூஜித்து பாவவிமோசனம் பெற்றுப் பின் துவாரகை மீண்டார். மகாஞானி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரன் வாயு வடிவில் காட்சி தந்த நான்கு தலங்களில் ஓர் தலம்.

மூர்த்தி, தீர்த்தம் தலம் என சிறப்பு பெற்ற இத்தலத்தில் சந்திரன் சயரோகம் தீர, தனது கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்ததால் இங்கு உள்ள சுயம்புலிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது.

சிவபெருமானுக்கு மேற்குப்பகுதியில் விருஷபம், சூலத்துடன் கூடிய சிலை உள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

பஞ்சநிலை கோபுரம், கோயிலின் ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நடந்த அற்புத சம்பவங்களை விளக்கும்படியாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருதலவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சந்திரன் தனி சன்னதியில் தனது மனைவியரில் இருவருடன் ஒரே கல்லில் காட்சி தரும் அற்புதத்தலம்.

திருவிழா:

சித்திரையில் 10 நாள் மற்றும் ஆடியில் 10 நாட்கள் வருடத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆருத்ராதரிசனம், அன்ன அபிசேகம், பிரதோச நாட்களிலும் சிறப்பு பூசை உண்டு.

இத்தலத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை மனம் உருகி வேண்டிக்கொள்ள ‌தொழுநோய்கள் குணமாகின்றன.

ஆடித்தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து ‌கொள்ள திருமணத்தடை நீங்குகிறது. புத்திரபாக்கியம் கிடைக்கிறது.

வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மட்டும் செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *