அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு, பொள்ளாச்சி அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 290 932, 98437 17101

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமணீஸ்வரர்
அம்மன் பார்வதி, கங்கா
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் கங்கா தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தேவம்பாடி வலசு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மூதாதையர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதற்காக பகீரதன் சிவனை வேண்டி, கங்காதேவியை ஆகாயத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தான். அவள் பெரும் ஆற்றலுடன் பூமியை நோக்கி வந்ததால் சிவன் அவளை தனது தலையில் தாங்கி, வேகத்தைக் குறைத்தார். பின், ஜடாமுடியை சாய்த்து பூமியில் பாயவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்திய சிவனின் தலையிலேயே கங்காதேவி குடி கொண்டாள். இதனால் இவளை சிவனது மனைவி என்றும் சொல்வர். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் சிவனுடன் பார்வதி, கங்காதேவி ஆகிய இருவரும் அருளுகின்றனர்.

இந்த தலத்தில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாக நம்பிக்கை இருக்கிறது. எனவே தெய்வம்பாடி வலசுஎன்றழைக்கப்பட்ட இவ்வூர், “தேவம் பாடிவலசுஎன்று மருவியது.

சிவன் தனது இரண்டு கண்களையும் பாதி மூடிய தவநிலையில், பூணூல் அணிந்து காட்சி தருகிறார். இவரது நெற்றியில் நட்சத்திர வடிவத்தில் நெற்றிக்கண்ணும், பாதங்கள் இரண்டும் ஒட்டியநிலையிலும் இருக்கிறது.

அளவில் சிறிதாக இருக்கும் இக்கோயில் புல்வெளிக்கு மத்தியில் இயற்கை அழகுடன் அமைந்திருக்கிறது. கருவறை சுற்றுச்சுவரில் தெய்வங்கள், எதுவும் இல்லை. கொடிமரம், பலிபீடமும் கிடையாது. சுவாமியின் எதிரே உருத்ராட்சை அணிந்த நந்தியும், பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகங்களும் உள்ளனர்.

இரட்டை அம்பிகை தலம் என்பதால் வேம்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அருகே சண்டிகேஸ்வரர் சிவனுடன் இருக்கிறார். இத்தலத்தின் விநாயகர் வேம்பு விநாயகர் எனப்படுகிறார்.

பார்வதி, கங்காதேவி ஆகிய இருவருடன் உள்ள இந்த சிவனது தரிசனம் விசேட பலன்களைத் தரக்கூடியது. அம்பாள் கோயில்களில் தலவிருட்சமாக இருக்கும் வேப்ப மரம் இந்த சிவத் தலத்தின் விருட்சமாக இருப்பது சிறப்பம்சம்.

திருவிழா: மகா சிவராத்திரி

வேண்டுதல்கள்:                              தம்பதியர் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க இத்தலத்தில் வேண்டிக் கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *