அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்

அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவதிருப்பதி) திருக்கோளூர் – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தமாநிதிபெருமாள்
உற்சவர் நிஷோபவித்தன்
தாயார் குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்கோளூர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய்ச் சேருகின்றன. நாராயணன் இந்த நிதிகளைப் பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதிஎன்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தலப் பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளைப் பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலப் பெருமாளுக்கு அதர்மபிசுனம்என்ற பெயரும் உண்டு. இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்க தலங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளூர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லி மங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி(தொலைவில்லி மங்கலம்)

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும்.

நவதிருப்பதியை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். எனவே கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் புறப்படுகிறது.

பாடியவர்கள்:

நம்மாழ்வார் மங்களாசாஸனம்

வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே.

நம்மாழ்வார்

திருவிழா: வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்கின்றனர்.

இருப்பிடம் :

திருநெல்வேலியிலிருந்து -37 கி.மீ. தூரத்தில்திருக்கோளூர் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை.

தங்கும் வசதி : தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *