அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்

அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001 திருவள்ளூர் மாவட்டம்.

+91-44-2766 0378, 97894 19330 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

thiruevvulur-moolavar_veera_raagavar_swamy_koil460

மூலவர் எவ்வுள்கிடந்தான் (வீரராகவப் பெருமாள்)
உற்சவர் வைத்திய வீரராகவர்
தாயார் கனகவல்லி
தீர்த்தம் ஹிருதாபதணி
ஆகமம் பாஞ்சராத்திரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் எவ்வுளூர்
ஊர் திருவள்ளூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார். வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். கிழவரும் புசித்துப் பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் திரும்பவும் தபம் செய்தார். ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த கிழவர் எவ்வுள்என்று வினவ, முனிவரும் தன் இடத்தையே காட்டி இவ்விடம் படுத்துக் கொள்ளவும்என்றார்.


மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம்,”வரம் கேள்எனக் கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது. evvulur3தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விடப் புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். இலட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் விஜயகோடி.

வனம்: வீஷாரண்யம்.

evvulur2பாடியவர்கள்:

திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மங்களாசாஸனம்

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

திருமங்கையாழ்வார்

evvulur1திருவிழா:

பிரம்மோற்சவம் தைமாதம் – 10 நாட்கள். பிரம்மோற்சவம் சித்திரைமாதம் – 10 நாட்கள். பவித்ர உற்சவம் – 7 நாட்கள்.

இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகள்.

பிரார்த்தனை:

வைத்திய வீரராகவர் பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.

தவிர கல்யாணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர, செல்வம் பெருக இத்தலத்துப் பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம். இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும். இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாகக் கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

வழிகாட்டி:

கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது. திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம். சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவள்ளூர்,சென்னை.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *