சோம்பல் நீங்க
சோம்பல் நீங்க
உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்.எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல். வெற்றியடையத் துடிக்கும் உங்களுக்கு சோம்பல்தான் கடுமையான எதிரி. சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய பிடியிலிருந்து மீள்வது கடினம். சோம்பலின் மறுபெயர்தான் போரடிக்கிறது என்கிற வார்த்தை. எனக்கு சந்தர்ப்பம் இல்லை; சான்சு இல்லை; என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்தவனோ,தானே சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு, உழைத்துக்கொண்டே சென்று உங்கள் கண்முன்னால் உங்களை வென்றுவிடுவான்.
சோம்பல் ஒரு பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும். “இடித்துரைத்தால் துடித்துப் போய்விடுவேன்” என்னும் மனப்பாங்கு வரவேண்டும்.
சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வுமுறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.
சோம்பலற்று இருக்க பிரச்சனைகள் சந்திப்பது நல்லது. குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். தூக்கம் குறையும். எழுந்தும் செய்யவேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டு தூங்குவது நல்லது. சோம்பல் வரும்போது எறும்பு, தேனீ ஆகியவற்றை நினைவில் நிறுத்துங்கள். சோம்பல் பறந்துபோகும்.
அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்றுவழிபடுங்கள்.
எறும்பீஸ்வரர் | திருவெறும்பூர் | திருச்சி |
கைலாசநாதர் | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி |
ya that is very good message
Thanks