Tag Archives: திருவொற்றியூர்

தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98407 97878

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவொற்றியூர்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. முன்மண்டபத்தில் ஒரு பாண லிங்கம் இருக்கிறது. தெட்சிணாமூர்த்திக்கு பூஜை நடக்கும்போது, இந்த இலிங்கத்திற்கும் பூஜை செய்யப்படும்.

ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர்

அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் – 600 019 சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிபுரீஸ்வரர்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆதிபுரி
ஊர் திருவொற்றியூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

வைகுண்டத்தில் எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. “நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்என்று பரந்தாமனிடம் கேட்டார்.