Tag Archives: திருக்கடையூர்

அருள்மிகு அபிராமி திருக்கோயில், திருக்கடையூர்

அருள்மிகு அபிராமி திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

+91 04364 287 429(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மாலை 4 முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அமிர்தகடேஸ்வரர், சுயம்பு மூர்த்தி

உற்சவர்: – காலசம்ஹாரமூர்த்தி

அம்மன்: – அபிராமியம்மன்

தல விருட்சம்:  – ஜாதிமல்லி

தீர்த்தம்: – அமிர்தகுளம், கங்கை தீர்த்தம்

பழமை:       – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திருக்கடவூர்

ஊர்: – திருக்கடையூர்

மாவட்டம்:    – நாகப்பட்டினம்

மாநிலம்: தமிழ்நாடு

ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது. மற்றவர்கள் இதை வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ எடுத்து அர்சித்ததற்கு சமம்.

சோழ நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அபிராமி பட்டர் அவதரித்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலிருந்தே இவர் அபிராமியின் மேல் அளவற்ற பக்தி கொண்டு பித்தனைப் போல திரிந்தார். இவருக்கு வேண்டப்படாதவர்கள் இவரைப்பற்றி சரபோஜி மன்னரிடம் தவறாக கூறிவிட்டார்கள். பட்டரை அழைத்த மன்னர் இன்று என்ன திதி?’ என கேட்டார். சதா சர்வகாலமும் முழுநிலவு போன்ற அபிராமி முகத்தின் நினைப்பிலேயே இருந்ததால், ‘இன்று பவுர்ணமி திதி,’ என கூறிவிட்டார். ஆனால், அன்று அமாவாசை திதி.

மன்னருக்கு கோபம் வந்து விட்டது. ‘இன்று இரவு நிலா வராவிட்டால், நீ கழுவேற்றப்படுவாய்,’ என கூறிச் சென்று விட்டார். கோயில் வாசலில் நெருப்பு வளர்க்கப்பட்டு, அதன் மேல் உறி கட்டி அபிராமி பட்டரை நிறுத்தி உறியைத் தொங்கவிட்டனர்.