Tag Archives: ஆத்தூர்

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர் -636102, சேலம் மாவட்டம்

+914282 320 607(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தலையாட்டி விநாயகர்(காவல் கணபதி)

தீர்த்தம்: – வசிஷ்ட நதி

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – ஆற்றூர்

ஊர்: – ஆத்தூர்

மாவட்டம்: – சேலம்

தலவரலாறு

சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன்.

காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.