Category Archives: புதுக்கோட்டை

அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி, புதுக்கோட்டை மாவட்டம்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில், அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள எட்டியத்தளியில் உள்ளது. அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம் இது. இவ்வாலயத்தில் சனி பகவானுக்கு ஒரு சந்நிதி கட்டப்பட்டது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மற்ற ஆலயத்தில் நவக்கிரகங்களில் சனி பகவானும் இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் இருப்பர். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டால் சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம்.

அகஸ்திய முனிவருக்குக் களத்திரதோஷம் இருந்ததாகவும், அவர் இங்கு பூஜித்ததால் களத்திரதோஷம் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறுகிறது.

 

ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில்

அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4371 233301

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆத்மநாதர்
அம்மன் யோகாம்பாள்
தல விருட்சம் குருந்த மரம்
தீர்த்தம் அக்னிதீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சதுர்வேதிமங்கலம், சிவபுரம்
ஊர் ஆவுடையார்கோயில்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர். மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார்.