Category Archives: நீலகிரி

காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 6717

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசிவிஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்காந்தல்
ஊர் ஊட்டி
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் மனம் போன போக்கில் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.

இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தைக் கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்– 643 101, நீலகிரி மாவட்டம்.

+91- 423 – 223 8686, 94430 50414 (மாற்றங்களூக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தந்தி மாரியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்னூர்
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர்.

ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து நோக்கிய போது, சிறுமி ஒருத்தி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார்.

மறுநாள், இத்தகவலை மற்றவர்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில், அவர் அதே காட்சியைக்கண்டு அதிர்ந்து, மறுபடியும் மற்றவர்களிடம் கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய அனைவரும் அன்றிரவில் குதிரை லாயத்தில் தங்கினர்.

காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர். அன்று இரவில், ஒருவரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில், சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாக கூறினாள். அதன்பின், அம்பிகைக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர்.