Category Archives: பரிகார தலங்கள்

வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், வீரமாங்குடி

அருள்மிகு வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், வீரமாங்குடி, திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 94435 86453

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வஜ்ரகண்டேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் வில்வம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வீரமாங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்என்று வரம் பெற்றிருந்த வஜ்ரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அவனுடன் சண்டையிட்டும் வெற்றி பெற முடியவில்லை. தேவர்கள், அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி, சிவனிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், சிவனடியார் ஒருவரை அசுரனிடம் அனுப்பினார். அவர் அசுரனுடன் போர் வீரன் போல சண்டையிட்டு அழித்தார். இறக்கும் நேரத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன், சிவனிடம் மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயரால் வஜ்ரகண்டேஸ்வரர்என்றும் பெயர் பெற்றார். வீரனாக வந்த அடியாரால் அசுரன் அழிந்ததால் தலத்திற்கு வீரமாங்குடிஎன்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலுக்கென கோபுரம் கிடையாது. இங்குள்ள அம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு மங்களாம்பிகைஎன்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர்

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436, 93828 89430.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் காமாட்சி
தல விருட்சம் செண்பக மரம்
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
ஆகமம்/பூஜை காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வட(திரு)நாகேஸ்வரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் சேக்கிழார்என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், “உத்தமசோழபல்லவர்என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, “பெரியபுராணம்என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.

ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள இராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனைத் தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார்.