Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி, திருச்சி மாவட்டம்.
+91- 431 – 270 4621, 271 0484, 270 0971
காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். உச்சிப்பிள்ளையார் கோயில் காலை 6 – இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தாயுமானவர் | |
அம்மன் | – | மட்டுவார்குழலி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
ஆகமம்/பூஜை | – | காரணம், காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சிரபுரம், மலைக்கோட்டை | |
ஊர் | – | திருச்சி | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், அப்பர் |
வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் எனப் போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய “திரிசிரன்” என்னும் அசுரன், சிவனை வேண்டித் தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்” என்று பெயர் பெற்றார். தலம் “திரிச்சிராமலை” என்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.
+91- 431-276 8546, 94439-19091, 97918 06457 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள் | |
அம்மன் | – | காந்திமதியம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம், நாக தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | முக்கீச்சுரம் | |
ஊர் | – | உறையூர் | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
சோழஅரசர் ஒருவர் யானை மேல் உலா வந்தபோது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர் சூட்டினான்.
பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையைக் கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் “திருமூக்கீச்சுரம்” என்று பெயர் ஏற்பட்டது.