அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை – 643 001, நீலகிரி மாவட்டம்.
+91-423-244 2754 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | மகா மாரியம்மன் , மகா காளியம்மன் |
தீர்த்தம் | – | அமிர்தபுஷ்கரணி |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | உதகை |
மாவட்டம் | – | நீலகிரி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர்.
அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது. அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர்.
அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.
கருவறையில் இரு அம்பாள்கள்(மாரி, காளி) ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம்.
இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.
காட்டேரியம்மன் :
இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோசம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும், வண்டிமாடு கால்நடைகளுக்கு கட்டுவதால் நல்ல பலன்கள் ஏற்படுகிறது.
திருவிழா – (பிப்ரவரி மாதம்) 28 நாட்கள்.
இந்த திருவிழா நாட்களில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தேர் வீதி உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுகின்றனர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை. அம்மாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் விஷேட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது.
மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் வேண்டிக் கொண்டால் பூரண குணமடைகிறார்கள்.
இவை தவிர குழந்தை பாக்கியம், திருமணபாக்கியம், விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைக்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறிய பின்பு அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்பு புடவையும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. சிறு அளவில் தேர் செய்து தேர்த்திருவிழா அன்று அம்மனுக்கு செலுத்துகிறார்கள். உப்பு அள்ளி வீசுகின்றனர். அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
SIR,
PLEASE NOTE THAT MARIAMMAN AND KALIAMMAN TEMPLE (SANTHAI KADAI MARIAMMAN) SITUATED AT OOTY, WILL BE OPENED FROM MORNING 6.00 AM TO EVENING 8.00 PM. IT WILL NOT BE CLOSED IN THE MIDDLE. PLEASE CORRECT THE TIMINGS
SIR,
PLEASE NOTE THAT MARIAMMAN AND KALIAMMAN TEMPLE (SANTHAI KADAI MARIAMMAN) SITUATED AT OOTY, WILL BE OPENED FROM MORNING 6.00 AM TO EVENING 8.00 PM. IT WILL NOT BE CLOSED AT 11.00 AM . PLEASE CORRECT THE TIMINGS
DONE
THANK YOU FOR CORRECTING THE TIMINGS OF MARIAMMAN AND KALIAMMAN TEMPLE (SANTHAI KADAI MARIAMMAN) SITUATED AT OOTY
SWAMINATHAN. G
That’s a genuinely imrivsspee answer.