அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்தாரம்மன், ஞானமூர்த்தி

அம்மன்: – முத்தாரம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – வங்கக்கடல்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வீரைவளநாடு

ஊர்: – குலசேகரன்பட்டினம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

சுயம்புவாகத் தோன்றிய அம்பாள் வடிவங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன. ‌

மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி,”எனக்குச் சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் ‌கொடுத்துனுப்புஎன்று கூற, ‌அதே போல அர்ச்சகர் கனவிலும் தோன்றி,”ஆசாரி தரும் சிலையை சுயம்பு ‌அருகே வைத்து வழிபடுஎன்று கூறி மறைந்தாள். அதன்படியே மக்களால் செய்யப்பட்டது.

அம்பாள் தன் திருமேனியைத் தானே தேர்ந்தெடுத்தாள் என்பது இக்கோயில் வரலாற்றின் தனி சிறப்பு.

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அ‌தை பரிவர்த்தனை யோகம் என்பர்.

அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள்.

அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இ‌தை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும்.

எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, இயந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது.

தந்திரம் என்பது பூசை முறை.

மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம். இயந்திரம் என்பது சாமி சிலைகள்(மருந்து சாத்தி்ப்) பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் இயந்திர செப்புத் தகடு.

முத்தாரம்மன் பெயர்காரணம் :

அம்மை ந‌‌‌ோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்த‌ைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது. முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து + ஆற்று + அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள்.

கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் சுவாமி அம்பாள் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து இருக்கிறார்கள். மதுரையை மீனாட்சியன்னை ஆட்சி செய்வதைப் போல இங்கும் அம்பாளின் ஆட்சியே நடைபெறுகிறது.

தசரா பெருந்திருவிழா (10 நாள்) –

புரட்டாசி நவராத்திரி விசயதசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம். இதுவே இத்தலத்தின் மிகப் பெரிய விழா ஆகும்.

மாவட்டத்தின் தென்பகுதி முழுவதையும் திருவிழாக் கோலமடையச்‌ செய்து ஊர்கள் தோறும் இல்லம் தோறும் கொண்டாடப்படும் விழாவாக அமைகிறது.

ஆடிக்‌கொ‌டை திருவிழா (3 நாள்) –

குறவர் குறத்தி வேடமிடுதல், காணிக்கை பிச்சை எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தல்.

சித்திரை மாதப்பிறப்பின்போது சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி விசு அன்று சிறப்பு தீபாராதனைகளும் அன்னாபிசேகமும் ‌நடைபெறுகின்றன. திருக்கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடுகளும் அம்பாள் திருத்தேரில் உலா வரல்.

சொக்கப்பனைத் தீபம் ஏற்றுதல் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

மார்கழி தனூர் மாத பூ‌‌சை விசேடம்.

மாசி மாதம் மகாசிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அம்‌மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் உடனே குணமாகிவிடுகிறது. பிள்ள‌ை வரம் வேண்டுதலை அம்மன் உடனடியாகத் தீர்த்து வைக்கிறாளாம்.

41 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் (லெப்ரஸி) தொழுநோய் குணமாகிறது. கை,கால், ஊனம், மனநிலை பாதிப்படைந்தவர்கள், ஆகிய‌ோர் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைகின்றனர். ‌

சொத்துகள் இழந்தவர்கள் இத்தலத்தில் வழிபட்டு அந்த கஷ்டத்திலிருந்து மீள்வதாகக் கூறுகிறார்கள்.

வழக்கு, வியாபார நட்டம் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு சுபிட்சம் அடைய இத்தலத்து முத்தாரம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.

மாவிளக்கு பூ‌சை, அங்கப்பிரதட்சணம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், உண்டியல் காணிக்கை ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *