அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம்

அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4252 – 278 644 , 93451-96814 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாணவரதராஜர்
தாயார் வேதவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமராவதி தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சங்கரராம நல்லூர்
ஊர் கொழுமம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான சங்கரன்பெருமாளின் திருநாமமான ராமன்என்ற பெயர்களை இணைத்து சங்கரராமநல்லூர்என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வ இலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.

அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது.
கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார். கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது.

பெரியாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், இராமானுஜர் ஆகியோர் முன்மண்டபத்தில் உள்ளனர். மூலவரின் விமானம் ஏகதளம் எனப்படுகிறது.

திருவிழா:

சித்திரைப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழியில் பிரம்மோற்ஸவம்.

கோரிக்கைகள்:

நின்ற கோலத்தில் உள்ள கல்யாண வரதராஜரை வணங்கினால் திருமணத்தடைகள் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் நீங்கவும், புத்திரப்பேறு கிடைக்கவும் வேண்டலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *