அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி
அருள்மிகு கருப்பண்ண சுவாமி கோயில், ராங்கியம், உறங்காப்புளி, புதுக்கோட்டை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கருப்பண்ண சுவாமி, அங்காள பரமேஸ்வரி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ராங்கியம் உறங்காப்புளி | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இராமபிரான் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி திரும்பும் போது, பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களும் பின் தொடர்ந்தன. அவர் செல்லும் வழியில் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கினார். அந்தமரம் இரவு வேளையிலும் உறங்காமல் இருந்து அவரை பாதுகாத்தது. எனவே இந்த மரம் “உறங்காப்புளி” எனப்பட்டது. இப்போதும் இங்குள்ள புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்குள்ள கருப்பசுவாமியும் அவரைப் பாதுகாத்தார். புளியமரத்தடியில் மந்திரமூர்த்தி எனப்படும் முத்துவீரப்ப சுவாமிகள், பொம்மணன், திம்மணன், ஆகாசவீரன் ஆகிய கருப்பசுவாமியின் தளபதிகளும் காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது.
பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள்.
இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.
இங்குள்ள முன்னோடி மற்றும் சப்பாணி ஆகியோர், ஒருவருக்கு யார் கெடுதல் செய்தார்களோ, அவர்களை திருப்பித்தாக்க தயங்க மாட்டார்கள். இவர்களது சன்னதியின் முன்பு எரிக்கப்பட்ட விறகு கட்டைகளின் சாம்பல் இருக்கிறது. இதை பூசிக் கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் மனச் சுத்தியுடன் வைத்து விட்டால் எப்பேர்பட்ட பிரச்னையும் தீரும். கடன் விவகாரத்தில் ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள் ஆகியோரை கடுமையாகத் தண்டிப்பார்கள்.
இவர்களது அரசாங்கத்தில் “மன்னிப்பு” என்ற வார்த்தைக்கே இடமில்லை. இவர்களை வணங்கி விட்டு, சட்டென திரும்பக்கூடாது. பத்தடி பின்னால் வந்து தான் திரும்ப வேண்டும். இந்த சன்னதிக்குள் நின்று சத்தம் போடக்கூடாது. வம்பு பேசக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால், வெளியில் நின்று வணங்கலாம்.
திருவிழா:
இங்கு ஆண்டுதோறும் சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது.
வேண்டுகோள்:
இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். இவர்களது சன்னதியின் முன்பு எரிக்கப்பட்ட விறகு கட்டைகளின் சாம்பல் இருக்கிறது. இதை பூசிக் கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் மனச் சுத்தியுடன் வைத்து விட்டால் எப்பேர்பட்ட பிரச்னையும் தீரும். கடன் விவகாரத்தில் ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள் ஆகியோரை கடுமையாகத் தண்டிப்பார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
Leave a Reply