அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்மாவட்டம்.

+91- 4253 – 242 026 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேலாயுதர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கிணத்துக்கடவு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமேஎன்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் வேலாயுத சுவாமிஎன அழைக்கப்பட்டார்.

700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, “கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, “திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குணமாகிவிடும்என்று கூறி மறைந்தார். திவானும் இத்தலத்திற்கு வர, அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட, புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது.

இந்தக்கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், திருவடியையும் காண நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனேஎன்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

ஞானப்பழத்திற்காக பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முத்துக்குமாரசுவாமி, இந்த பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. மகத்துவ மூலிகைகள் நிறைந்த மலை.

திருவிழா:

தைப்பூசம், கார்த்திகை, கந்தசஷ்டி, பங்குனிஉத்திரம்.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *