உருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வே(த)தி மங்கலம்

அருள்மிகு உருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வே()தி மங்கலம், சிவகங்கை மாவட்டம்.

+91- 4577- 246170, 94431 91300 +91-4577-242 981, 98420-82048

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உருத்ரகோடீஸ்வரர்
அம்மன் ஆத்மநாயகி
தல விருட்சம் எலுமிச்சை
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மட்டியூர்
ஊர் சதுர்வேதமங்கலம்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெறப் பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனைப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார்.

கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி உருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த உருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது.

பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி உருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி உருத்ரர்களும் வணங்கிய இந்த இலிங்கத்திற்கு , “உருத்ர கோடீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.

லவகுசன் அஸ்வமேத யாகம் செய்த இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம், தலமரம், தலப் பறவை என ஐவகை சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோடி உருத்ரர்கள் வணங்கிய இங்கு வேண்டிக்கொள்ள நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரகாரத்தில் சுவாமிக்கு முன்இடப்புறம் சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரை ஞாயிற்றுக்கிழமையில் இராகுகால நேரத்தில் வணங்கினால் குலம் சிறக்கும், கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நந்தி மிகவும் பெரியவடிவில் இருப்பதும், நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பதும் சிறப்பு.

வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார். நான்கு வேதங்களை ஓதும் வேதவிற்பன்னர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால், இவ்வூர் சதுர்வேதமங்கலம்என்றழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அரவன் எனும் பாம்பு வடிவிலான மலை உள்ளது. சிவனை வணங்கிய பிரம்மன் எப்போதும் அவரை வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதால், அவரே இம்மலையாக மாறியதாக வரலாறு கூறுகிறது.

இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் எனப்படுகிறார். ராஜ கோபுரம் 5 நிலைகளுடன் கூடியது. இத்தல இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

திருவிழா:

மாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் பக்தர்கள் இங்கு நேரில் வந்து சிறப்பு பூஜை செய்து கொள்ளலாம்.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கு ஏற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வளையல் காணிக்கை செலுத்துகின்றனர். சரபேஸ்வரருக்கு வடை, பாசிப் பருப்பு பாயசம் வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *