காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 6717

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசிவிஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்காந்தல்
ஊர் ஊட்டி
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் மனம் போன போக்கில் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.

இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தைக் கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.

பாணலிங்கத்திற்கு இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக இலிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக இலிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் எனக் கூறுவர். பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை; அது, பிரம்மா, திருமால் முதலியோர் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் இலிங்க வடிவிலே உருண்டோடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் சேர்ந்து இருக்கும். மற்ற மூன்று விரல்களும் இணைந்து மேல்நோக்கி இருக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியைவணங்குவது நலம்.

இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. (மடத்தை ஸ்தாபனம் செய்தவர்கள்). இம்மண்டபம் தியானம் செய்ய ஏற்றது. நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்றதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளதால் இவ்வாலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கிறது.

திருவிழா:

மகாசிவராத்திரி 3 நாள் திருவிழா.          

புதுவருடப் பிறப்பு, பிரதோஷ நாட்கள்.

பிரார்த்தனை :

மனமுருகி வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழுந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகிறது. தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

One Response to காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி

  1. Tobi says:

    That’s a smart answer to a tricky quostien

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *