இளமீஸ்வரர் கோயில், தாரமங்கலம்

அருள்மிகு இளமீஸ்வரர் கோயில், தாரமங்கலம், சேலம் மாவட்டம்.

+91- 4290 – 252 100

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இளமீஸ்வரர்
அம்மன் தையல்நாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் தெப்பம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாரமங்கலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

தாருகாவனத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த கெட்டிமுதலி என்ற குறுநில மன்னன், ஒரு காலத்தில் இப்பகுதிக்கு வந்தான். இங்குள்ள வனப்பகுதியைக் கண்டதும் வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது. நீண்ட நேரம் வனத்திற்குள் சுற்றியும் விலங்குகள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை.

களைப்படைந்த மன்னன் ஒரு இடத்தில் அமர்ந்தான். அவனுடன் சென்ற சேவகர்கள், மன்னனின் குதிரையை ஒரு இடத்தில் கட்ட முயன்றனர். குதிரையோ அந்த இடத்தில் நிற்காமல் தாவிக்குதித்து வேறிடத்தில் போய் நின்றது. அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என ஆய்வு செய்தபோது ஏதும் புலப்படவில்லை. உடனே அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டான். பூமிக்கடியில் ஒரு இலிங்கம் இருந்தது. பரவசமடைந்த மன்னன், அந்த சுயம்புலிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினான். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.

பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார்.

மகாவிஷ்ணு, தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறுகின்றனர். கல்மண்டபம் போல உள்ள இத்தலத்தில் மூலவரும், நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் இளமீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார்.

தையல்நாயகி தெற்கு நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி, சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன. இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்யப்படுகிறது

திருவிழா:

பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:

செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் அருகம்புல் மாலை, கொழுக்கட்டை நைவேத்யம் படைத்து இவரை வணங்கிட ஞானம் கிடைக்கும். படிப்பில் மந்தமாக உள்ள மாணவர்களின் பெயரில் இங்கு அர்ச்சனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *