அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில்,
திருவண்ணாமலை
, திருவண்ணாமலை மாவட்டம்

மூலவர் ஆதி அருணாசலேஸ்வரர்
அம்மன் ஆதி அபீதகுஜாம்பாள்
ஊர் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் – 1.
ஓதிமா மலர்கள்
… (4-63-…)
திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது ; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். இத்தலத்திற்கு அப்பர் பெருமான் அருளியுள்ள நேரிசைப் பதிகம் திருவண்ணமாலை எனப் பெயரிட்டு நான்காம் திருமுறையுள் உள்ளது.

இக்கோயில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்தது; கோயில் பெயர்ப் பலகையில் ஆதி அருணாசலேஸ்வரர், ஆதி அபீதகுஜாம்பாள் கோயில் என்றெழுதப்பட்டுள்ளது.

வாகன மண்டபத்தை அடுத்தாற் போல் காரைக்காலம்மையார், விநாயகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திலகவதி, பாலகணபதி, மூன்று சிவலிங்கங்கள் உள்ளிட்ட பல மூர்த்தங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதியை தனியே வலம் வரலாம்; தனி சந்நிதி.


சென்னை, திருச்சி மற்றும் பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பெங்களூரிலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *