Category Archives: சிவ ஆலயங்கள்
சிவ ஆலயங்கள் – பாடல் பெறாதவை
சிவ ஆலயங்கள் – பாடல் பெறாதவை |
||
இறைவன் |
ஊர் |
மாவட்டம் |
பிரகதீஸ்வரர் | கங்கை கொண்ட சோழபுரம் | அரியலூர |
பள்ளி கொண்டீஸ்வரர் | சுருட்டப்பள்ளி | ஆந்திரா |
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | தேவதானம் | இராஜபாளையம் |
ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி | உத்தரகோசமங்கை | இராமநாதபுரம் |
எமனேஸ்வரமுடையார் | எமனேஸ்வரம் – பரமக்குடி | இராமநாதபுரம் |
வன்மீக நாதர் | திருவெற்றியூர் | இராமநாதபுரம் |
சகல தீர்த்தமுடையவர் | தீர்த்தாண்டதானம் | இராமநாதபுரம் |
அட்டாள சொக்கநாதர் | மேலப்பெருங்கரை | இராமநாதபுரம் |
சந்திரசேகரர் | அத்தாணி | ஈரோடு |
மகிமாலீஸ்வரர் | ஈரோடு | ஈரோடு |
நட்டாற்றீஸ்வரர் | காங்கயம்பாளையம் | ஈரோடு |
பச்சோட்டு ஆவுடையார் | காங்கேயம் – மடவிளாகம் | ஈரோடு |
காயத்ரி லிங்கேஸ்வரர் | பவானி | ஈரோடு |
அமரபணீஸ்வரர் | பாரியூர் | ஈரோடு |
ஆருத்ரா கபாலீஸ்வரர் | எழுமாத்தூர் | ஈரோடு |
காசி விஸ்வநாதர் | வாரணாசி | உத்தரப்பிரதேசம் |
மார்க்கசகாயேஸ்வரர் | ஒரத்தூர் | கடலூர் |
அனந்தீஸ்வரர் | சிதம்பரம் | கடலூர் |
இளமையாக்கினார் | சிதம்பரம் | கடலூர் |
ஆத்மநாதசுவாமி | திருப்பெருந்துறை – சிதம்பரம் | கடலூர் |
பொன்னம்பலநாதர் (சொர்ணபுரீஸ்வரர்) | நல்லாத்தூர் | கடலூர் |
நடராஜர் கோயில் | நெய்வேலி | கடலூர் |
ஆதிமூலேஸ்வரர் | பரங்கிப்பேட்டை | கடலூர் |
சிவக்கொழுந்தீஸ்வரர் | திருத்திணை | கடலூர் |
தாணுமாலையர் | சுசீந்திரம் | கன்னியாகுமரி |
நந்தீஸ்வரர் | திருநந்திக்கரை | கன்னியாகுமரி |
நாகராஜா சுவாமி | நாகர்கோவில் | கன்னியாகுமரி |
யோகீஸ்வரர் | புத்தேரி – நாகர் கோயில் | கன்னியாகுமரி |
நஞ்சுண்டேஸ்வரர் | நஞ்சன்கூடு | கர்நாடகா |
உடையீஸ்வரர் | இளநகர் | காஞ்சிபுரம் |
முக்தீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
வீரட்டேஸ்வரர் | கீழ்படப்பை | காஞ்சிபுரம் |
கைலாசநாதர் | கோவளம் | காஞ்சிபுரம் |
திரிசூலநாத சுவாமி | திரிசூலம் | காஞ்சிபுரம் |
பெரியாண்டவர் | திருநிலை | காஞ்சிபுரம் |
வியாக்ரபுரீஸ்வரர் | திருப்புலிவனம் | காஞ்சிபுரம் |
முன்குடுமீஸ்வரர் | பி.வி.களத்தூர் | காஞ்சிபுரம் |
தர்மேஸ்வரசுவாமி | மணிமங்கலம் | காஞ்சிபுரம் |
வெள்ளீஸ்வரர் | மாங்காடு | காஞ்சிபுரம் |
நாகேஸ்வர சுவாமி | வடநாகேஸ்வரம், குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
வேதநாத சுவாமி (வேதநாயகி) | வீரப்பராசாம்பேட்டை | காஞ்சிபுரம் |
குபேரலிங்கேசுவரர் | திருக்கழுக்குன்றம் | காஞ்சிபுரம் |
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) | படப்பை | காஞ்சீபுரம் |
ஐராவதேஸ்வரர் | அத்திமுகம்– ஓசூர் | கிருஷ்ணகிரி |
சந்திரசூடேசுவரர் | ஓசூர் | கிருஷ்ணகிரி |
கடுத்துருத்தி சிவன் | கடுத்துருத்தி | கேரளா |
மம்மியூர் மகாதேவன் | குருவாயூர் | கேரளா |
மகாதேவர் (இரட்டையப்பன்) | சேர்பு – பெருவனம் | கேரளா |
இராஜராஜேஸ்வரர் | தளிப்பரம்பா | கேரளா |
வடக்கு நாதர் | திருச்சூர் | கேரளா |
பூர்ணத்திரயேஸ்வரர் | திருப்பூனித்துறை | கேரளா |
மகாதேவர் | திருவைராணிக்குளம் | கேரளா |
மகாதேவர் | வைக்கம் | கேரளா |
மன்னீஸ்வரர் | அன்னூர் | கோயம்புத்தூர் |
வில்லீஸ்வரர் | இடிகரை | கோயம்புத்தூர் |
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) | இருகூர் | கோயம்புத்தூர் |
அர்ச்சுனேஸ்வரர் | கடத்தூர் | கோயம்புத்தூர் |
நஞ்சுண்டேஸ்வரர் | காரமடை | கோயம்புத்தூர் |
மொக்கணீஸ்வரர் | கூழைய கவுண்டன்புதூர் | கோயம்புத்தூர் |
தாண்டேஸ்வரர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
காலகாலேஸ்வரர் | கோவில்பாளையம் | கோயம்புத்தூர் |
வாலீஸ்வரர் | சேவூர் | கோயம்புத்தூர் |
தர்மலிங்கேஸ்வரர் | தர்மலிங்க மலை மதுக்கரை | கோயம்புத்தூர் |
அமணலிங்கேஸ்வரர் | தளி – திருமூர்த்தி மலை | கோயம்புத்தூர் |
அமணீஸ்வரர் | தேவம்பாடி வலசு | கோயம்புத்தூர் |
ஆதீஸ்வரர் | பெரியகளந்தை | கோயம்புத்தூர் |
பட்டீஸ்வரர் | பேரூர் | கோயம்புத்தூர் |
விருந்தீஸ்வரர் | வடமதுரை | கோயம்புத்தூர் |
சங்கமேஸ்வரர் | கோட்டைமேடு | கோயம்புத்தூர் |
ஆழிகண்டீஸ்வரர் | இடைக்காட்டூர் | சிவகங்கை |
ஆட்கொண்டநாதர் | இரணியூர் | சிவகங்கை |
தான்தோன்றீஸ்வரர் | இலுப்பைக்குடி | சிவகங்கை |
இராஜேந்திர சோழீஸ்வரர் | இளையான்குடி | சிவகங்கை |
உருத்ரகோடீஸ்வரர் | சதுர்வேதி மங்கலம் | சிவகங்கை |
சசிவர்ணேஸ்வரர் | சிவகங்கை | சிவகங்கை |
பரஞ்சோதி ஈசுவரர் (ஞானாம்பிகை) | தஞ்சாக்கூர் | சிவகங்கை |
திருநோக்கிய அழகிய நாதர் | திருப்பாச்சேத்தி | சிவகங்கை |
மலைக்கொழுந்தீஸ்வரர் | திருமலை | சிவகங்கை |
மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) | தேவகோட்டை | சிவகங்கை |
தேசிகநாதசுவாமி | நகர சூரக்குடி | சிவகங்கை |
தட்சிணாமூர்த்தி | பட்டமங்கலம் | சிவகங்கை |
சுகந்தவனேஸ்வரர் | பெரிச்சிகோயில் | சிவகங்கை |
சோமநாத சுவாமி (ஆனந்தவல்லி) | மானாமதுரை | சிவகங்கை |
வீரசேகரர் | சாக்கோட்டை | சிவகங்கை |
சோமநாதர் | மானாமதுரை | சிவகங்கை |
காயநிர்மாலேஸ்வரர் | ஆறகழூர் | சேலம் |
கரபுரநாதர் | உத்தமசோழபுரம் | சேலம் |
சாம்பமூர்த்தீஸ்வரர் | ஏத்தாப்பூர் | சேலம் |
சித்தேஸ்வரர் | கஞ்சமலை | சேலம் |
அறப்பளீஸ்வரர் | கொல்லிமலை | சேலம் |
சுகவனேஸ்வரர் | சேலம் | சேலம் |
இளமீஸ்வரர் | தாரமங்கலம் | சேலம் |
கைலாசநாதர் | தாரமங்கலம் | சேலம் |
சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) | நங்கவள்ளி | சேலம் |
ஆட்கொண்டீஸ்வரர் | பெத்தநாயக்கன் பாளையம் | சேலம் |
தான்தோன்றீஸ்வரர் | பேளூர் | சேலம் |
விருத்தாச்சலேஸ்வரர் | வெங்கனூர் | சேலம் |
கைலாசநாதர் (துர்கா பரமேஸ்வரி ) | அம்மன்குடி | தஞ்சாவூர் |
அகஸ்தீஸ்வர சுவாமி | அரசூர் | தஞ்சாவூர் |
காசிவிஸ்வநாதர் | உமையாள்புரம் | தஞ்சாவூர் |
காளஹஸ்தீஸ்வரர் | கதிராமங்கலம் | தஞ்சாவூர் |
குபேரபுரீஸ்வரர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
பிரகதீசுவரர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
ஐராவதேஸ்வரர் | தாராசுரம் | தஞ்சாவூர் |
கைலாசநாதர் | திங்களூர் | தஞ்சாவூர் |
காளத்தியப்பர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
கம்பகரேசுவரர் | திருப்புவனம் | தஞ்சாவூர் |
பஞ்சவர்ணேஸ்வரர்(கல்யாணசுந்தரேஸ்வரர்) | நல்லூர் | தஞ்சாவூர் |
சுந்தரேஸ்வரர் | நெய்க் குப்பை | தஞ்சாவூர் |
புராதனவனேஸ்வரர் (பெரியநாயகி ) | பட்டுக்கோட்டை | தஞ்சாவூர் |
பொதுஆவுடையார் | பரக்கலக்கோட்டை | தஞ்சாவூர் |
இராமலிங்கசுவாமி | பாபநாசம் | தஞ்சாவூர் |
ஆலந்துறையார் , பசுபதி நாதர், பிரம்புரீசுவரர் | புள்ளமங்கை | தஞ்சாவூர் |
சோமநாதர் | பெருமகளூர் | தஞ்சாவூர் |
பரசுநாதசுவாமி | முழையூர் | தஞ்சாவூர் |
வஜ்ரகண்டேஸ்வரர் | வீரமாங்குடி | தஞ்சாவூர் |
சுயம்புலிங்கேஸ்வரர் | அமானிமல்லாபுரம் | தர்மபுரி |
மல்லிகார்ஜூனேசுவரர் | தகட்டூர் | தர்மபுரி |
மல்லிகார்ச்சுனர் | தர்மபுரி | தர்மபுரி |
தீர்த்தகிரீசுவரர் | தீர்த்தமலை | தர்மபுரி |
விஸ்வநாதர் | கண்ணாபட்டி | திண்டுக்கல் |
சோமலிங்கசுவாமி | சோமலிங்கபுரம், கன்னிவாடி | திண்டுக்கல் |
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி | திண்டுக்கல் | திண்டுக்கல் |
பெரியாவுடையார் | மானூர் | திண்டுக்கல் |
மகாலிங்கேஸ்வரர் | விராலிப்பட்டி | திண்டுக்கல் |
மருதாந்தநாதேஸ்வரர் | ஆங்கரை, லால்குடி | திருச்சி |
காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) | கீழசிந்தாமணி, திருச்சி | திருச்சி |
பூமிநாதர் | திருச்சி | திருச்சி |
பிரம்மபுரீஸ்வரர் | திருப்பட்டூர் | திருச்சி |
சப்தரிஷிஸ்வரர் | லால்குடி | திருச்சி |
அகத்தீஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
காசிநாதசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
வீரமார்த்தாண்டேஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
வன்னியப்பர் | ஆழ்வார்குறிச்சி | திருநெல்வேலி |
மதுநாதசுவாமி | இலத்தூர் | திருநெல்வேலி |
சுயம்புலிங்க சுவாமி | உவரி | திருநெல்வேலி |
வில்வவனநாதர் | கடயம் | திருநெல்வேலி |
சொரிமுத்தைய்யனார் | காரையார், பாபநாசம் | திருநெல்வேலி |
கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | கோடகநல்லூர் | திருநெல்வேலி |
சங்கரலிங்கசுவாமி | கோடரங்குளம் | திருநெல்வேலி |
சங்கரநாராயணர் | சங்கரன்கோவில் | திருநெல்வேலி |
நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) | செப்பறை | திருநெல்வேலி |
அம்மநாதர் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
மத்தியஸ்த நாதர் | தாருகாபுரம் | திருநெல்வேலி |
தொண்டர்கள் நயினார் சுவாமி | திருநெல்வேலி | திருநெல்வேலி |
நாறும்பூநாத சுவாமி | திருப்புடைமருதூர் | திருநெல்வேலி |
காசி விஸ்வநாதர் | தென்காசி | திருநெல்வேலி |
கைலாசநாதர் | தென்திருப்பேரை | திருநெல்வேலி |
பாபநாசநாதர் | பாபநாசம் | திருநெல்வேலி |
கைலாசநாத சுவாமி | பிரம்மதேசம் | திருநெல்வேலி |
சதாசிவ மூர்த்தி | புளியறை | திருநெல்வேலி |
பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) | மலையான்குளம் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | முறப்பநாடு | திருநெல்வேலி |
சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) | வாசுதேவநல்லூர் | திருநெல்வேலி |
சிவந்தியப்பர் | விக்கிரமசிங்கபுரம் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி |
அகத்தீசுவரர் | தாராபுரம் | திருப்பூர் |
அனவரத தாண்டவேஸ்வரர் | அரடாப்பட்டு | திருவண்ணாமலை |
திரு மணிச்சேறை உடையார் | இஞ்சிமேடு, பெரணமநல்லூர் | திருவண்ணாமலை |
ஆதிஅருணாசலேஸ்வரர்
|
திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
கைலாசநாதர் | நார்த்தம்பூண்டி | திருவண்ணாமலை |
மல்லிகார்ஜுனசுவாமி | பர்வதமலை, கடலாடி | திருவண்ணாமலை |
புத்திரகாமேட்டீஸ்வரர் | புதுக்காமூர், ஆரணி | திருவண்ணாமலை |
திருக்கரையீஸ்வரர் | பெரணமல்லூர் | திருவண்ணாமலை |
கனககிரீசுவரர் | தேவிகாபுரம் | திருவண்ணாமலை |
தீர்க்காஜலேஸ்வரர் | நெடுங்குணம் | திருவண்ணாமலை |
குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) | கோயம்பேடு – சென்னை | திருவள்ளூர் |
ஏகாம்பரேஸ்வரர் | சவுகார்பேட்டை – சென்னை | திருவள்ளூர் |
இருதயாலீசுவரர்
|
திருநின்றவூர்
|
திருவள்ளூர்
|
ஒத்தாண்டேஸ்வரர் | திருமழிசை | திருவள்ளூர் |
திருவேட்டீஸ்வரர் | திருவல்லிக்கேணி – சென்னை | திருவள்ளூர் |
தீர்த்தபாலீஸ்வரர் | திருவல்லிக்கேணி – சென்னை | திருவள்ளூர் |
ஆதிபுரீஸ்வரர் | திருவொற்றியூர் – சென்னை | திருவள்ளூர் |
தெட்சிணாமூர்த்திசுவாமி | திருவொற்றியூர் – சென்னை | திருவள்ளூர் |
தர்மலிங்கேஸ்வரர் (சர்வமங்களா தேவி ) | நங்கநல்லூர் – சென்னை | திருவள்ளூர் |
நாகமல்லீஸ்வரர் | நாலூர், மீஞ்சூர் | திருவள்ளூர் |
கச்சாலீஸ்வரர் | பாரிமுனை – சென்னை |
திருவள்ளூர்
|
ஐமுக்தீஸ்வரர் | பெரியபாளையம் | திருவள்ளூர் |
இராமநாதீஸ்வரர் | போரூர், சென்னை | திருவள்ளூர் |
திருவுடைநாதர் | மணலி – வட சென்னை | திருவள்ளூர் |
தேனுபுரீஸ்வரர் | மாடம்பாக்கம் – சென்னை | திருவள்ளூர் |
கற்பகேஸ்வரர் (கற்பக சௌந்தரி) | முகப்பேர், சென்னை | திருவள்ளூர் |
நடராஜர் | லிங்கிச் செட்டித் தெரு, சென்னை | திருவள்ளூர் |
இரவீஸ்வரர் | வியாசர்பாடி – சென்னை | திருவள்ளூர் |
அகஸ்தீஸ்வரர் | வில்லிவாக்கம், சென்னை | திருவள்ளூர் |
தண்டீஸ்வரர் | வேளச்சேரி – சென்னை | திருவள்ளூர் |
புஷ்பரதேஸ்வரர் | ஞாயிறு | திருவள்ளூர் |
பிறவி மருந்தீஸ்வரர் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
யக்ஞேயஸ்வரர் | திருவாரூர் | திருவாரூர் |
ஏகாம்பரேஸ்வரர் | மானந்தகுடி | திருவாரூர் |
கைலாசநாதர் | இராஜபதி | தூத்துக்குடி |
பூவனாதர் (செண்பகவல்லி) | கோவில்பட்டி | தூத்துக்குடி |
மீனாட்சி சுந்தரேஸ்வரர் | ஆண்டிபட்டி | தேனி |
பூலாநந்தீஸ்வரர் | சின்னமனூர் | தேனி |
மாணிக்கவாசகர் | சின்னமனூர் | தேனி |
காளாத்தீஸ்வரர் | தென்காளஹஸ்தி, உத்தமபாளையம் | தேனி |
இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) | பெரியகுளம் | தேனி |
பரமசிவன் (மலைக்கோயில்) | போடிநாயக்கனூர் | தேனி |
கண்ணீஸ்வரமுடையார் | வீரபாண்டி | தேனி |
பஞ்சவடீஸ்வரர் | ஆனந்த தாண்டவபுரம் | நாகப்பட்டினம் |
நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
மாதங்கீஸ்வரர் | திருநாங்கூர் | நாகப்பட்டினம் |
சொர்ணபுரீஸ்வரர் | தெற்கு பொய்கைநல்லூர் | நாகப்பட்டினம் |
நாகநாதசுவாமி | நாகநாதர் சன்னதி | நாகப்பட்டினம் |
வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) | மயிலாடுதுறை | நாகப்பட்டினம் |
வீரட்டேஸ்வரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
விஸ்வநாதர் | சீர்காழி | நாகப்பட்டினம் |
வீரட்டேசுவரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
கைலாசநாதர் | இராசிபுரம் | நாமக்கல் |
எயிலிநாதர் | நன்செய் இடையாறு – பரமத்திவேலூர் | நாமக்கல் |
பீமேஸ்வரர் | பரமத்திவேலூர் | நாமக்கல் |
அசலதீபேஸ்வரர் | மோகனூர் | நாமக்கல் |
காசி விஸ்வநாதர் | ஊட்டி | நீலகிரி |
ஆத்மநாத சுவாமி | ஆவுடையார் கோயில் | புதுக்கோட்டை |
அகஸ்தீஸ்வரர் | எட்டியத்தளி | புதுக்கோட்டை |
சிகாநாதர் | குடுமியான்மலை | புதுக்கோட்டை |
பூமிநாதர் | செவலூர் | புதுக்கோட்டை |
கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) | திருக்கோவ(க)ர்ணம் | புதுக்கோட்டை |
சுகந்த பரிமளேஸ்வரர் | திருமணஞ்சேரி | புதுக்கோட்டை |
சத்திய கிரீஸ்வரர் | திருமயம் | புதுக்கோட்டை |
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர் ) | திருவரங்குளம் | புதுக்கோட்டை |
வியாக்ரபுரீஸ்வரர் | திருவேங்கைவாசல் | புதுக்கோட்டை |
சுந்தரேஸ்வரர் | துர்வாசபுரம் | புதுக்கோட்டை |
கைலாசநாதர் (பிரசன்னநாயகி) | நெடுங்குடி | புதுக்கோட்டை |
நாகநாதர் | பேரையூர் | புதுக்கோட்டை |
சொக்கலிங்கேஸ்வரர் (மீனாட்சியம்மன்) | வேந்தன்பட்டி | புதுக்கோட்டை |
வேதபுரீசுவரர் | புதுச்சேரி | புதுச்சேரி |
திருக்காமீஸ்வரர் (கோகிலாம்பிகை) | வில்லியனூர் | புதுச்சேரி |
ஏகாம்பரேஸ்வரர் | செட்டிகுளம் | பெரம்பலூர் |
மூவர் திருக்கோயில் | அழகப்பன் நகர் | மதுரை |
ஐராவதீஸ்வரர் | ஆனையூர். மதுரை | மதுரை |
காசி விஸ்வநாதர் | இரும்பாடி – சோழவந்தான் | மதுரை |
மீனாட்சி சொக்கநாதர் | கோச்சடை | மதுரை |
சுந்தரமகாலிங்க சுவாமி | சதுரகிரி | மதுரை |
ஆதிசொக்கநாதர் | சிம்மக்கல், மதுரை | மதுரை |
திருமூலநாத சுவாமி (அகிலாண்டேஸ்வரி) | சோழவந்தான் | மதுரை |
பிரளயநாதசுவாமி | சோழவந்தான் | மதுரை |
கைலாசநாதர் | திடியன் மலை (உசிலம்பட்டி) | மதுரை |
அகத்தீஸ்வரர் | திருச்சுனை | மதுரை |
சொக்கநாதர் | திருமங்கலம் | மதுரை |
திருமறைநாதர் | திருவாதவூர் | மதுரை |
முக்தீஸ்வரர் | தெப்பக்குளம், மதுரை | மதுரை |
தென்திருவாலவாயர் | தெற்கு மாசி வீதி, மதுரை | மதுரை |
காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) | பழங்காநத்தம் – மதுரை | மதுரை |
இம்மையிலும் நன்மை தருவார் | மேலமாசி வீதி – மதுரை | மதுரை |
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் | விராதனூர் | மதுரை |
விஸ்வநாதர் | சாத்தூர் | விருதுநகர் |
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | தேவதானம் | விருதுநகர் |
மாயூரநாதர் சுவாமி | பெத்தவநல்லூர், இராஜபாளையம் | விருதுநகர் |
வைத்தியநாதசுவாமி (சிவகாமி அம்பாள்) | மடவார்வளாகம் | விருதுநகர் |
அர்த்தநாரீஸ்வரர் | இரிஷிவந்தியம் | விழுப்புரம் |
வாலீஸ்வரர் | கோலியனூர் | விழுப்புரம் |
சொர்ணபுரீஸ்வரர் | தென்பொன்பரப்பி | விழுப்புரம் |
நாகேஸ்வர சுவாமி | பூவரசன் குப்பம் | விழுப்புரம் |
கவுதமேஸ்வர் | காரை – வேலூர் | வேலூர் |
ஜலகண்டேஸ்வரர் | கோட்டை, வேலூர் | வேலூர் |
நரசிம்மேஸ்வரர் (மரகதவல்லி) | தியாமுகச்சேரி – ஐயம்பேட்டை சேரி | வேலூர் |
வளவநாதீஸ்வரர் | வளையாத்தூர் | வேலூர் |
மார்க்கபந்தீசுவரர் | விரிஞ்சிபுரம் | வேலூர் |
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.
+91-4573 – 221 223 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் | |
அம்மன் | – | பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி | |
தீர்த்தம் | – | கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் | |
ஊர் | – | ராமேஸ்வரம் | |
மாவட்டம் | – | ராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த இலிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி” என்ற திருநாமம் அமைந்தது. இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.
புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். “மகாளயம்” என்றால் “கூட்டமாக பூமிக்கு வருதல்” எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்யச் சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.