Tag Archives: எலுமியன்கோட்டூர்
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர், திருஇலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2769 2412, 94448 65714 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னதாகவே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.
மூலவர் | – | தெய்வநாயகேஸ்வரர் | |
அம்மன் | – | கனககுசாம்பிகை | |
தல விருட்சம் | – | மரமல்லிகை | |
தீர்த்தம் | – | மல்லிகா புஷ்கரணி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர் | |
ஊர் | – | எலுமியன்கோட்டூர் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர் |
தேவர்களைக் கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்காரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.
ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் “இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு” என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு, அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.
அரம்பையர்களான(தேவலோக கன்னிகள்) அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டித் தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன், “யோக தெட்சிணாமூர்த்தி“யாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம். குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.