Tag Archives: காலடி
திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி
அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.
+91- 93888 62321
காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காலடியப்பன் (ஸ்ரீகண்ணன்) | |
தல விருட்சம் | – | பவளமல்லி | |
தீர்த்தம் | – | பூர்ணாநதி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சசலம் | |
ஊர் | – | காலடி | |
மாவட்டம் | – | எர்ணாகுளம் | |
மாநிலம் | – | கேரளா |
கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர். சிவனின் கருணையால் கி.பி. 788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் சிவனின் அம்சமாக அவதரித்தார். சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார். 7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர், திருமணம் செய்யாமல், தன் தாய்க்குப் பணிவிடை செய்து வந்தார். பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.
சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்டார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியைத் தானமாக வழங்கினாள். சங்கரரின் கண்கள் குளமாகின. பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சிப் பிழம்பாக உருவெடுத்தது.