Tag Archives: மணிமங்கலம்
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம்
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 98413 63991 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
இராஜகோபாலசுவாமி |
உற்சவர் |
– |
|
இராஜகோபாலர் |
தாயார் |
– |
|
செங்கமலவல்லி |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
சதுர்வேதி மங்கலம் |
ஊர் |
– |
|
மணிமங்கலம் |
மாவட்டம் |
– |
|
காஞ்சிபுரம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருசேத்ர போரின்போது, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், “இராஜகோபாலர்” என்று பெயர் பெற்றார்.
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருக்கிறார். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள்களையும் தரிசிக் கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார்.
தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில், மணிமங்கலம்
அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2717 8157, 98400 24594
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தர்மேஸ்வரர் | |
அம்மன் | – | வேதாம்பிகை | |
தல விருட்சம் | – | சரக்கொன்றை | |
தீர்த்தம் | – | சிவபுஷ்கரணி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேதமங்கலம் | |
ஊர் | – | மணிமங்கலம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.
ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான்.