Tag Archives: வண்ணாரப்பேட்டை
அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி
அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி – 627 003. திருநெல்வேலி மாவட்டம்.
+91- 462 – 250 0344, 250 0744 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தீப்பாச்சியம்மன் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | வண்ணாரப்பேட்டை., திருநெல்வேலி |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள் இவர்கள். இவர்களைத் தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் தமிழரிடையே உண்டு. கண்ணகிக்கு தனிக்கோயில் இருப்பது போல, திருநெல்வேலியில் தீப்பாச்சியம்மன் என்ற பெண் தெய்வம் அருள்பாலிக்கிறாள்.
எட்டயபுரம் பகுதியில் வசித்த அக்கம்மாள், இளவயதிலேயே அதிக தெய்வ பக்தியுடையவளாக திகழ்ந்தாள். அவளுக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவரில் யாரில்லாவிட்டாலும் இன்னொருவர் இல்லை என்ற அளவுக்கு அன்பு.
ஒருநாள், அவள் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம்,”இப்போது எனக்கு ஒரு செய்தி வரும்” என்றாள். உடனிருந்தவர்களுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. தங்கள் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்தனர். அக்கம்மாவை வீட்டிற்கு அழைத்தனர். அவள் காரணம் கேட்டாள். அவர்கள் ஏதும் சொல்லாமல் உடன் வரும்படி கட்டாயப்படுத்தினர். அப்போது அவள்,”வேலை செய்வதற்காக, வெளியூர் சென்றிருந்த என் கணவன் இறந்து விட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள்” என்றாள்.
நடந்த உண்மையும் அதுதான்.
அவளது சொல்லைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் அக்கம்மா வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அழவில்லை.