Category Archives: கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் – ஆலயங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் – ஆலயங்கள் |
|
அருள்மிகு |
ஊர் |
மன்னீஸ்வரர் | அன்னூர் |
அவிநாசியப்பர் | அவிநாசி |
ஆனைமலை, பொள்ளாச்சி |
|
வில்லீஸ்வரர் | இடிகரை |
ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி | இடுகம்பாளையம் |
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) | இருகூர் |
விநாயகர் | ஈச்சனாரி |
கரிவரதராஜப் பெருமாள் | உக்கடம் |
சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் | உடுமலைப்பேட்டை |
பிரசன்ன விநாயகர் | உடுமலைப்பேட்டை |
உடுமலைப்பேட்டை |
|
அர்ச்சுனேஸ்வரர் | கடத்தூர் |
கருத்தம்பட்டி |
|
அரங்கநாதர் | காரமடை |
நஞ்சுண்டேஸ்வரர் | காரமடை |
மொக்கணீஸ்வரர் | கூழைய கவுண்டன்புதூர் |
கல்யாணவரதராஜர் | கொழுமம் |
தாண்டேஸ்வரர் | கொழுமம் |
கொழுமம் |
|
கொழுமம், குமாரலிங்கம் |
|
சங்கமேஸ்வரர் | கோட்டைமேடு |
கோயம்புத்தூர் |
|
கோயம்புத்தூர் |
|
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் | கோயம்புத்தூர் |
காலகாலேஸ்வரர் | கோவில்பாளையம் |
வீரஆஞ்சநேயர் | சண்முகபுரம் |
ஐயப்பன் | சித்தாபுதூர் |
சுண்டக்காமுத்தூர் |
|
சூலக்கல் |
|
வாலீஸ்வரர் | சேவூர் |
தர்மலிங்கேஸ்வரர் | தர்மலிங்க மலை மதுக்கரை |
அமணலிங்கேஸ்வரர் | தளி – திருமூர்த்திமலை |
இலட்சுமி நரசிம்மர் | தாளக்கரை |
திருமுருகநாதர் | திருமுருகன்பூண்டி |
தேக்கம்பட்டி |
|
அமணீஸ்வரர் | தேவம்பாடி வலசு |
நவகரை |
|
அரங்கநாதர் | பாலமலை |
ஆதீஸ்வரர் | பெரியகளந்தை |
பெருமாநல்லூர் |
|
பட்டீஸ்வரர் | பேரூர் |
காரணவிநாயகர் | மத்தம்பாளையம் |
தண்டாயுதபாணி | மருதமலை |
வெங்கடேசப்பெருமாள் | மொண்டிபாளைம் |
விருந்தீஸ்வரர் | வடமதுரை |
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், மொண்டிபாளைம்
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், மொண்டிபாளைம், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 – 4296 289 270 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வெங்கடேசப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
வெங்கட்ராமர் |
தாயார் |
– |
|
அலமேலுகங்கை |
தல விருட்சம் |
– |
|
ஊஞ்சல்மரம் |
தீர்த்தம் |
– |
|
தெப்பம் |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மொண்டிபாளையம் |
மாவட்டம் |
– |
|
கோயம்புத்தூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த சிறுவன் ஒருவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன் போன்று புலம்பிக் கொண்டும், தெய்வங்களை வணங்கிக்கொண்டும், அருகில் இருந்த குன்றின் மீது ஏறி குதித்துக்கொண்டும் இருந்தான். அவனது நடத்தையில் சுந்தேகமுற்ற அவனது பெற்றோர்களும், ஊர் மக்களும் சேர்ந்து ஒர் நாள் காலையில் அவன் வசித்த பசுக்கொட்டகையில் மறைந்து கொண்டு கண்காணித்தனர். அப்போது, அவன் நான்கு சுமை புளிய விறகுகளை நெருப்பில் கொளுத்தி எரிந்த பின் அதனை தனது கையில் அள்ளி வாழை இலையில் வைத்து அருகில் இருந்த ஒர் கிணற்றில் மிதக்கவிட்டு அதன் மீது அமர்ந்து திருப்பதியை நினைத்து மந்திரங்களைக் கூறியபடி சுவாமியை பூஜித்தான். இக்காட்சியைக் கண்ட அவர்கள் சிறுவனின் வடிவில் வந்திருப்பது வெங்கடாஜலபதி என்பதையறிந்து அவனை வணங்கி கோயில் எழுப்ப உத்தரவு கேட்டனர்.
அப்போது அவன் நான்கு ஒட்டர்களை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓடிச்சென்று ஓரிடத்தில் மண்ணை அப்பறப்படுத்தி குழி தோண்டச் செய்தான். பின் அவன் அக்குழியில் இறங்கி அங்கே இருந்த பாறையை ஓங்கி அடித்தான். அப்பாறை இரண்டாகப்பிளக்க, அதன் கீழ் பூமணல் நிறைந்திருந்த குழி இருந்தது. அதன் கீழ் தேவர்களால் பூஜிக்கப்பட்ட சாளகிராம சிலை, சங்கு மற்றும் தாமிரக்கிண்ணம் இருந்தது. அதனை அப்படியே எடுத்து அருகில் இருந்த ஊஞ்சமரத்தின் கீழ் வைத்தனர். அதன் பின்பு தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.