Category Archives: கோயம்புத்தூர்
அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம்
அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4252 – 278 831 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
மூலவர் | – | தத்தாத்ரேயர் | |
அம்மன் | – | சவுந்திரநாயகி | |
தலவிருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அமராவதி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | குமாரலிங்கம் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, “நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்.” “என்ன பரிகாரம் செய்தால் எனது பாவம் நீங்கும்?” என்று மன்னர் கேட்க, “இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்” என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.
மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும் வகையில் இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்மாவட்டம்.
+91- 4253 – 242 026 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேலாயுதர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கிணத்துக்கடவு | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே” என்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் “வேலாயுத சுவாமி” என அழைக்கப்பட்டார்.