Tag Archives: ஏத்தாப்பூர்
சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர்
அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம்.
+91- 4282 – 270 210
காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாம்பமூர்த்தீஸ்வரர் | |
உற்சவர் | – | உமாமகேஸ்வரர் | |
அம்மன் | – | மனோன்மணி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | வசிஷ்டநதி | |
ஆகமம் | – | காமிகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வசிஷ்டாரண்யம் | |
ஊர் | – | ஏத்தாப்பூர் | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். வசிஷ்டமுனிவர் இங்கு வந்து நதியில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார்.
அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர்
அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர் – சேலம் மாவட்டம்.
+91- 4282 – 270 210
காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | லட்சுமி கோபாலர் |
தாயார் | – | வேதவல்லி |
தீர்த்தம் | – | வசிஷ்ட தீர்த்தம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஏத்தாப்பூர் |
மாவட்டம் | – | சேலம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பார்வதியின் தந்தை தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். தான் செல்லாத யாகத்திற்கு, பார்வதியை செல்ல வேண்டாம் என தடுத்தார் சிவன். ஆனால், தன் கணவனுக்கு மரியாதை கொடுக்காத தந்தையிடம் நியாயம் கேட்பதற்காக அம்பாள், யாகம் நடத்திய இடத்திற்கு சென்றுவிட்டாள். கோபம் கொண்ட சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசி சமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை மன்னித்து ஏற்றுக் கொண்டதோடு லிங்கமாகவும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது.