Tag Archives: முறப்பநாடு

கைலாசநாதர் திருக்கோயில், முறப்பநாடு

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், முறப்பநாடு, திருநெல்வேலி மாவட்டம்

+91- 98424 04554.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் சிவகாமி
தீர்த்தம் தெட்சிணகங்கை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோவில்பத்து
ஊர் முறப்பநாடு
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சோழமன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்தது. இந்த முகம் மாற வேண்டி சிவபெருமானை எண்ணி பிரார்த்தித்தான் அரசன். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். சோழனும் இங்கு வந்து நீராடினான். மன்னனின் மகள் முகம் மனித முகமாக மாறியது. பின்னர் சோழ மன்னன் சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். இக்கோயிலை வல்லாள மகாராஜா என்பவர் கட்டியதாகவும் ஒரு வரலாறு உண்டு.