Tag Archives: எல்க் மலை
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலதண்டாயுதபாணி, ஜலகண்டேசவரர் |
|
அம்மன் | – |
ஜலகண்டீஸ்வரி |
|
தலவிருட்சம் | – |
செண்பக மரம் |
|
தீர்த்தம் | – |
நீலநாரயணதீர்த்தம் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – |
மான்குன்றம் |
|
ஊர் | – |
எல்க் மலை |
|
மாவட்டம் | – | நீலகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பழனி முருகன் கோயிலுக்கு, குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர, பழனிக்குச் சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்குச் செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோயில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக ஆனது. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் எல்க் குன்று இருந்த இடம் இப்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோயில். முருகன் உள்ள தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம்.