Tag Archives: நேதாஜி ரோடு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மதுரைமாவட்டம்.

+91 452 234 2782 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

உற்சவர்

தண்டாயுதபாணி

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

நேதாஜி ரோடு, மதுரை

மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் சுந்தரர் மடம்என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும். பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு தண்டாயுதபாணிஎன்ற பெயர் ஏற்பட்டது. “மதுரை பழநியாண்டவர்என்ற பெயரும் உண்டு. முன்மண்டபத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன. கருவறையில் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். வலதுகையில் தண்டம் ஏந்தியுள்ள இவர், இடதுகையை இடுப்பில் வைத்துள்ளார். பெரும்பாலும் மூலவர் முருகன் அரசகோலத்திலேயே காட்சி தருவார். மகாமண்டபத்தில் மகா கணபதி, துர்க்கை, நாகராஜர், யோக ஆஞ்சநேயர், பரமேஸ்வரர், யோகதட்சிணாமூர்த்தி, காலபைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் கன்னிமூலவிநாயகர், வீரபத்திரர், பேச்சியம்மன், அங்காளஈசுவரி சன்னதிகள் உள்ளன.