Tag Archives: திருவாமத்தூர்
அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்.
+91- 4146-223 379, 98430 66252
காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அபிராமேஸ்வரர் | |
அம்மன் | – | முத்தாம்பிகை | |
தல விருட்சம் | – | வன்னி, கொன்றை | |
தீர்த்தம் | – | ஆம்பலம் பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை(ஆறு) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கோமாதுபுரம், திருஆமத்தூர் | |
ஊர் | – | திருவாமத்தூர் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய விலங்குகள் கொடுமைப்படுத்தி வந்தன. வருத்தமடைந்த பசுக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிவனை வேண்டிக் கொம்புகளை பெற்ற தலம் தான் திரு+ஆ+மத்தூர்.
இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது. இத்தல இறைவன் அபிராமேஸ்வரர் பசுவின் கால் குளம்பை தன் தலையில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார்.
இராவணனை வதம் செய்த இராமன் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார்.
சூரபத்மனை அழிப்பதற்காக முருகன், இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து, போருக்கு அனுப்பி வைத்தார்.