Tag Archives: பாபநாசம்
அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்
அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம், (திருப்பாலைத்துறை), தஞ்சாவூர் மாவட்டம்.
+91-94435 24410 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர் | |
அம்மன் | – | தவளவெண்ணகையாள் | |
தல விருட்சம் | – | பனைமரம் மற்றும் பாலை | |
தீர்த்தம் | – | வசிஷ்ட தீர்த்தம், இந்திரதீர்த்தம், எமதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை | |
ஊர் | – | பாபநாசம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
தாருகா வனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது. ராமர் சிவபிரானை வழிபட்டுத் தான் செய்த கொலைப் பாவத்தைப் போக்கிக் கொண்ட காரணத்தால் இத்தலம் பாவநாசம் எனப்பெற்றது.
இராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம்
அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 97901 16514
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | இராமலிங்கசுவாமி | |
அம்மன் | – | பர்வதவர்த்தினி | |
தீர்த்தம் | – | சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பாபநாசம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இலங்கையில் சீதையை மீட்ட இராமபிரான், தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக, இங்கு 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு இலிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 இலிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, இராமரின் பெயரால் “இராமலிங்கசுவாமி” என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த இலிங்கம் அவரது பெயரால் “அனுமந்தலிங்கம்” என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது.