Tag Archives: நெடுங்குடி
கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி
அருள்மிகு கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கைலாசநாதர், காசி நாதர் | |
அம்மன் | – | பிரசன்னநாயகி | |
தல விருட்சம் | – | வில்வமரம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நெடுங்குடி | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலைக் குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்குச் சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றைச் செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.