Tag Archives: வேந்தன்பட்டி
சொக்கலிங்கேஸ்வரர்(மீனாட்சியம்மன்) திருக்கோயில், வேந்தன்பட்டி
அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர்(மீனாட்சியம்மன்) திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
+91-95858 50663
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சொக்கலிங்கேஸ்வரர் | |
அம்மன் | – | மீனாட்சியம்மன் | |
தல விருட்சம் | – | வன்னி மரம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வேந்தன்பட்டி | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரையில் உறையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனைத் தலமாக இருக்கலாம். இப்பகுதிக்கு சென்ற பாண்டியர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதரை பிரதோஷ வேளையில் வழிபட உருவாக்கியிருக்கலாம். இத்தல வரலாறு சரிவர கிடைக்கவில்லை. ஆயினும், இது பழமையான கோயில்.
சோழர்களும் இத்தலத்தின் திருப்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோயிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டு வரப்பட்டன. இதில் பெரிய நந்தி, தஞ்சையில் வைக்கப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் உள்ளது. இரண்டு நந்திகளின் அமைப்பும் ஏறத்தாழ ஒன்றுபோல் உள்ளன. எனவே, இங்கு நந்தி வழிபாடே முக்கியமானதாயிற்று.