Tag Archives: பாம்புமேக்காடு மனை
அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை
அருள்மிகு நாகராஜர் திருக்கோயில், மாளா, பாம்புமேக்காடு மனை, திருச்சூர் மாவட்டம், கேரளா.
+91 – 480 – 289 0453, 289 0473 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலையில் மட்டும் திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகராஜா | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு | |
ஊர் | – | மாளா, பாம்புமேக்காடு மனை | |
மாவட்டம் | – | திருச்சூர் | |
மாநிலம் | – | கேரளா |
இரிஞ்ஞாலக் குடா அருகிலுள்ள மேக்காட்டில் வசித்த நம்பூதிரி ஒருவர் சிறந்த பக்திமான்; ஆனால் ஏழை. தன்குடும்ப வறுமை தீர அருகிலுள்ள திருவற்றிக்குளம் சிவன் கோயிலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து பஜனைப் பாடல்கள் பாடி வந்தார். சிவனிடம் தன் குடும்ப வறுமை நீங்க, உருக்கமாக பிரார்த்தித்தார். ஒரு முறை, அவர் தண்ணீர் எடுக்க அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார். அப்போது அங்கே பிரகாசம் எழுந்தது. சகல ஐஸ்வர்யங்களும் மிக்க ஒரு உருவம் அங்கு வந்தது. அதன் கையில் மாணிக்கக்கல் இருந்தது. நம்பூதிரி அந்த உருவத்திடம், “நீங்கள் யார்? இவ்வளவு பிரகாசமாக இருக்கிறீர்களே. உங்கள் கையில் ஏதோ மின்னுகிறேதே” என வரிசையாய் கேள்விகளை அடுக்கினார். இந்த உருவம் சற்று கோபத்துடன், “என்னைப் பற்றிய விசாரணை உனக்கு தேவையில்லாதது. தண்ணீர் எடுக்கத்தானே வந்தாய். எடுத்துக் கொண்டு போய்விடு” என்றது. இருப்பினும் நம்பூதிரி விடவில்லை. “சரி. உங்களைப் பற்றி எதுவும் செல்ல வேண்டாம். உங்கள் கையிலுள்ள கல் பளிச்சிடுகிறதே அதை எனக்கு தருவீர்களா?” என்றார்.