Tag Archives: நாச்சியார்கோவில்
அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில்
அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் – 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435 – 246 7017, 94435 – 97388 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருநறையூர் நம்பி |
உற்சவர் | – | இடர்கடுத்த திருவாளன் |
தாயார் | – | வஞ்சுளவல்லி |
தல விருட்சம் | – | வகுளம்(மகிழம்) |
தீர்த்தம் | – | மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம் |
ஆகமம் | – | வைகானஸம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | சுகந்தகிரி க்ஷேத்ரம் |
ஊர் | – | நாச்சியார்கோயில் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு “வஞ்சுளாதேவி” எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார்.
திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார்.