Tag Archives: அத்திமுகம்
ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி, அகிலாண்டேஸ்வரி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஓசூர், அத்திமுகம் | |
மாவட்டம் | – | கிருஷ்ணகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மகத்தி தோசம் பற்றிக்கொண்டது.
பிரம்மகத்தி தோசம் நீங்க அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகத்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு தோசம் நீங்கப் பெற்றனர்.